அக். 16 நவராத்திரி பூஜை ஆரம்பம்
சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் முக்கியமானது. நவராத்திரி பூஜையும் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. வீட்டில் பத்து நாட்களும் விரதமிருந்து கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி தவிர வேறு விழா எதுவும் இல்லை எனலாம். அந்த வகையில், வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழாவானது, வீடு என்ற கோயிலுக்கு நாம் கொண்டாடும் ஒரு பிரம்மோற்ஸவம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்தது நவராத்திரி விழாதான். புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் இந்த நவராத்திரியில் சக்தி தேவியை பூஜிப்பதுடன், நம் வாழ்க்கைத் தத்துவத்தை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளையும் வைத்து இந்த விழாவை கலகலப்பான விழாவாகக் கொண்டாடுகிறோம். ஒன்பது நாட்களும், ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை வைக்கிறோம். இவற்றின் தத்துவம் உயிர் வாழ்க்கைகளின் பரிணாமத் தத்துவத்தைக் கூறுவது. அதன்படி, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு உயிரினத்தை பொம்மைகளாகச் சுட்டிக்காட்டி, உயிரினங்களின் உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறவியில் பெறும் ஞானத்தை நாம் இதில் பெறுகிறோம். இந்த ஒன்பது படிகளின் தத்துவம் இதுதான்:
1வது படி: ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி: இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி: மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி: நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி: ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி: ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி: மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி: தேவர்கள், நவகிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி: பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது, கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


