மாடக்கோயில் கோடி புருஷஸுக்த பாராயணம்!
கோயில்கள் நிறைந்த நங்கநல்லூரில் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ளது திருமாடக் கோயில். சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருந்தபோதிலும் பல வகையிலும் சிறப்புறத் திகழ்கிறது.


கோயில்கள் நிறைந்த நங்கநல்லூரில் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ளது திருமாடக் கோயில். சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருந்தபோதிலும் பல வகையிலும் சிறப்புறத் திகழ்கிறது.
சோழர்கள் காலத்தில்தான் மாடக்கோயில்கள் கட்டப்படுவது வழக்கம். இதுபோல் கட்டப்படும் ஆலயங்களில் கீழ் தளம், மேல் தளம் என இரண்டு தளங்கள் இருக்கும். இரண்டிலும் சந்நிதிகள் காணப்படும்.
அவ்வகையில் நங்கநல்லூரில் உள்ள திருமாடக்கோயிலில் கீழ்த்தளத்தில் விஷ்வக்ஷேனர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், துர்க்கை, முருகன் ஆகியோரும் கோஷ்ட தெய்வங்களும் அருள்புரிகிறார்கள். ஆலயத்தின் உட்புறம் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயார், சஞ்சீவி ஆஞ்சநேயர், பெரிய திருவடி ஆகியோர் அழகுற அமைந்துள்ளதை தரிசிக்கலாம்.
தல விருட்சமாக தென்னை மரம் உள்ளது. மேல் தளத்தில் விநாயகப் பெருமான் சந்நிதியும் அதனையொட்டி காயத்ரி மண்டபமும் உள்ளன. அஷ்ட தள சக்கரம் விசேஷமாக அமைந்துள்ளது. விநாயகர் சந்நிதிக்கு மேல் தியான மண்டபம் உள்ளது.
இந்த ஆலயத்தில் இதுவரை 1 கோடி காயத்ரி ஹோமமும், 11 சண்டி ஹோமமும், 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், 4 வருடங்கள் தொடர்ந்து நாராயணீயம், தேவி மகாத்மியம் பாராயணங்களும், கணபதி ஹோமங்களும் ருத்ர பாராயணங்களும் நடந்து வந்துள்ளன. இதைத் தவிர சிவ, விஷ்ணு ஆலயங்களுக்கு உரிய அனைத்து வழிபாட்டு முறைகளும் நடக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2011ஆம் வருடம், ஸ்ரீமன் நாராயணன் குறித்து துதி செய்யப்படும் ஸ்ரீபுருஷஸýக்த பாராயணம் ஒரு கோடி எண்ணிக்கையில் செய்வதாக முடிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. காயத்ரி மண்டபத்தில் தினமும் காலை - மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்யப்பட்டு இது வரை 22 லட்சம் ஆவர்த்திகள் முடிந்துவிட்டன.
2021ஆம் வருடத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பாராயண வைபவத்தில் புருஷஸýக்தம் தெரிந்தவர்கள் தனிப்பட்ட நபராகவோ, ஒரு பிரிவாகவோ கலந்து கொள்ளலாம். உலக நன்மையை முன்னிட்டு இலவசமாக செய்யப்படுகிறது இந்தப் பாராயணம்.
மேலும் தகவலுக்கு 94445 16433.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...