திருத்தணியில் படித்திருவிழா
திருமுருகனின் திருத்தலங்களில் ஆறு தலங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகின்றார்.


திருமுருகனின் திருத்தலங்களில் ஆறு தலங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகின்றார். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருஆவினன்குடி, திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி) மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகியவையே அந்தத் தலங்கள். இவற்றில் திருத்தணி முருகனைத் தம் குலதெய்வமாக பல லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 31-ஆம் தேதியும் ஜனவரி ஒன்றாம் தேதியும் நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர் கூடி திருப்புகழ் பாடியவண்ணம் படிமீது ஏறிச் சென்று தணிகேசனை வணங்கி வருகின்றனர்.
அருணகிரிநாதர் திருத்தணித் தலத் திருப்புகழ் இரண்டில் படி மீது திருப்புகழ் பாடுவதைக் குறிப்பிட்டுள்ளார்.
வினைக்கினமாகும் எனத் தொடங்கும் திருப்புகழில் ""திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே!'' என்றும், ""நிலையான சமுத்திரமான'' எனத் தொடங்கும் திருப்புகழில்
"பல காலும் உனைத் தொழுவோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி
படி மீது துதித்துடன் வாழ அருள்வேலே!''
என்றும் பாடியுள்ளார்.
1916-ஆம் ஆண்டு வள்ளிமலை கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த சச்சிதானந்த சுவாமிகள் அங்குள்ள அமைதியான சூழ்நிலையால் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கி திருப்புகழை தானும் பாடி அங்குள்ள மக்களையும் பாடச் செய்தார். திருத்தணியில் படித்திருவிழாவை 1917 - 1918-ஆம் ஆண்டு வள்ளிமலை சுவாமிகள் துவக்கி வைத்தார். அப்போது முதல் பக்தர்கள் இவ்விழாவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...