ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நம்பிக்கை  கொள்ளுங்கள்...

வாழ்வில் சமாதானத்தை இழந்து தவிப்பவர்களா நீங்கள்? இயேசு கூறுவதைக் கேளுங்கள்

News image
Updated On :18 ஜனவரி 2013, 5:30 am

அபி

வாழ்வில் சமாதானத்தை இழந்து தவிப்பவர்களா நீங்கள்? இயேசு கூறுவதைக் கேளுங்கள்: ""அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கும் அளிக்கின்றேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல; நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.'' (யோவான் 15:27)
 உலகச் சுகங்களால் நமக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தர முடியாது. வறுமையில் வாடும்போது "எனக்குச் சொத்தும் சுகமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைக்கிறோம்.
 எப்படியாவது சொத்து சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சியும் செய்கிறோம். ஆனால் அளவுக்கு அதிகமான சொத்து சேர்க்கும்போது, அதுவே நமது நிம்மதியைப் பறித்து விடுகிறது.
 சிலர் தங்களுடைய சோகங்களை மதுபானத்தில் மூழ்க வைத்துச் சாகடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் மதுவின் மயக்கம் தீரும்போது, மீண்டும் தங்கள் சோகங்களுக்கே திரும்பி விடுகிறார்கள்.
 வேறு சிலர், தீய வேட்கைகளினால் தங்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உடல் சுகத்தைத் தேடி அலையும்போது அது தீயாகப் பற்றியெரிந்து அவர்களின் வாழ்வையே பொசுக்குகிறது.
 ""எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்பு கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லை கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.'' (சபை உரையாளர் 2:17)
 வாழப் பிடிக்காமல், வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கக்கூடாது நம்முடைய வாழ்க்கை. தவறான, அர்த்தமிழந்த நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும். எப்படி?
 இயேசுவின் அன்பு நம் வாழ்வில் கடந்து வரும்போது, உருக்குலைந்த நம் வாழ்வு உயிர் பெறும். அந்த இறையன்பை நாம் சுவைத்து, அவரை வழியும் உண்மையுமாக ஏற்று வாழத் தொடங்குவதே அர்த்தமுள்ள வாழ்வுக்கான ஒரே வழி.
 வாழ்க்கைப் போராட்டங்களிலும் வறுமையின் கோரப்பிடியிலும் கைதிகளாக இருந்த சூழ்நிலைகளிலும் அமைதியை இழக்காமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடைபெற்றவர்கள் ஏராளம்.
 அவர்களுடைய வெற்றியின் ரகசியம் யார்? இயேசுதான். உங்கள் வாழ்விலும் நிறைவான, முழுமையான அமைதியைத் தர அவரால் மட்டுமே முடியும்.
 இயேசு கூறுகிறார்: ""நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்'' (யோவான் 14:1).

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.