ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி அருகில் உள்ளது அன்னையின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 6வது பீடமாக விளங்குகிறது. அன்னையின் உடற்கூறுகளில் இடது கன்னம் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.
ராஜமுந்திரியில் அன்னை, விஸ்வேஸ்வரி (ரக்ஷினி) என்ற திருநாமத்துடனும், இறைவன் தண்டபாணி என்ற திருநாமத்துடனும் எழுந்தருள்கின்றனர். இங்குள்ள கோதாவரி, புனித நதியாகக் கருதப்படுகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி பாவம் நீங்கப் பெறுகிறார்கள். இந்த நதியில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலதேவர் மற்றும் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைதன்ய மஹாபிரபு போன்றோர் புனித நீராடி பலன் அடைந்ததாக வரலாறு.
கோதாவரியை தென்கங்கை என்றும் இராஜமுந்திரியை தெற்குகாசி என்றும் அழைக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாட்கள் புஷ்கர்னம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு புனித நீராடுகிறார்கள்.
இங்குள்ள "பிரம்மகிரி மலை' மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மலையில் கெüதம முனிவர் அகல்யாவுடன் வாழ்ந்து வந்தார். இங்கு வாழ்ந்த மக்களின் பசியை போக்க, ஆசிரமத்துக்கு அருகே ஒரு நெற்களஞ்சியத்தை வளர்த்து வந்தார். நன்கு வளர்ந்திருந்த கதிர்களைக் கண்டதும் பசு ஒன்று மேயத் தொடங்கியது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த கெüதமர் தர்பை புல்லை பசுவின் மேல் எறிந்தார். உடனே அந்தப் பசு கீழே விழுந்து இறந்தது.
"பசுவை கொன்று கோஹத்தி பாவத்துக்கு ஆளாகிவிட்டோமே'' என்று மனம் வருந்தினார் கௌதமர். ""எனது பாவங்கள் தீருவதற்கு நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்'' என்று ஈசனிடன் சரணாகதி அடைந்தார்.
ஈசன் திரியம்பகேஸ்வரர் அவர் முன் தோன்றி, "பிரம்மகிரியை பதினொரு முறை வலம் வந்து, கோடி லிங்கத்தை பூஜித்து கங்கையில் நீராடினால் பாவம் தீரும்'' என்றார். இறைவனின் ஆணைக்கிணங்க தன் மனைவி அகல்யாவுடன் புனித கங்கையில் நீராடி தன் பாவத்தை போக்கிக் கொண்டார் கௌதமர்.
திரியம்பகேஸ்வர் எழுந்தருளியுள்ள இத்தலத்தில் குசாவர்த்தம், வில்வ தீர்த்தம், கோடி தீர்த்தம் எனப்படும் பல தீர்த்தங்கள் உள்ளன. கார்த்திகை மாதப் பெüர்ணமியன்று இக்கோயிலில் நடைபெறும் ரதோற்ஸவம் பிரசித்தி பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் உலவும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடத்தில்தான் அன்னை விஸ்வேஸ்வரிக்கு தனி ஆலயம் எழுப்பப்பட்டு மக்கள் பூஜித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


