ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புதுகை நரசிம்மர்!

இறைவனது நாம சங்கீர்த்தனத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபடச் செய்தவர், புதுக்கோட்டை ஸ்ரீகோபாலகிருஷ்ண பாகவதர்.

News image
Updated On :16 மே 2013, 11:22 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இறைவனது நாம சங்கீர்த்தனத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபடச் செய்தவர், புதுக்கோட்டை ஸ்ரீகோபாலகிருஷ்ண பாகவதர். பாகவதர், ஒருநாள் புதுக்கோட்டை புதுக் குளத்தில்  குளித்துக்கொண்டிருந்தபோது நரசிம்ம விக்ரஹம் கிடைத்தது. உடனே அதை எடுத்துச் சென்று அப்போது புதுக்கோட்டையை ஆண்டு கொண்டிருந்த மன்னரிடம் சமர்ப்பித்தார்.

"இந்த அழகான நரசிம்ம விக்ரஹத்தை தாங்களே வைத்துக்கொண்டு பூஜை செய்யுங்கள்'' என்று அவர் கொடுத்து விட்டாராம். அன்று முதல் நரசிம்மத்தை தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு பூஜைகள்  செய்தார் பாகவதர்.

1920ஆம் வருடம் புதுக்கோட்டையில் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்ஸவத்தை கொண்டாடும் சம்பிரதாயத்தை ஏற்படுத்தி, நரசிம்ம விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார் பாகவதர். இவ்வாறு தொடங்கப்பட்ட  நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவமானது இன்றும் புதுக்கோட்டை, கீழ 3-ஆம் வீதியில் நடைபெற்று வருகிறது. பாகவதரிடம் பக்தி கொண்டவர்கள், பக்தர்கள் மற்றும் அனைத்து ஆன்மிக பெரியோர்களின் உன்னதமான ஆதரவோடு குறைவின்றி நடைபெறுகிறது. இந்த வருடம் மே.23 முதல் மே. 29வரை நடைபெற உள்ளது.

தகவலுக்கு: 94865 42444

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.