பரமபதநாதன்
காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் திசைமுகன்சேரி என்னும் சேரி ஐயன்பேட்டை கிராமத்தில் உள்ளது ஸ்ரீகோதண்டராம சுவாமி திருக்கோயில்.


காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் திசைமுகன்சேரி என்னும் சேரி ஐயன்பேட்டை கிராமத்தில் உள்ளது ஸ்ரீகோதண்டராம சுவாமி திருக்கோயில்.
இங்கு பிரதான மூர்த்தியாக ஸ்ரீபரமபதநாதர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக வீற்றிருக்கிறார். மூலவர் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு ஆதிசேஷன் குடை பிடிக்க, சிம்மாசனத்தில் தனது வலது திருவடியை மடித்தும், இடது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உடன் ஸ்ரீதேவி தாயாரும், பூதேவி தாயாரும் புன்னகையுடன் காட்சியளிக்கிறார்.
பரமபதநாதரைத் தவிர கனகவல்லி என்ற திருநாமத்துடன் தாயாரும் அருள்புரிகிறார். ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி, இலக்குவனுடன் காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வாரும், பெரிய திருவடியும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடி சந்நிதியையும், திருக்குளத்தையும் தரிசிக்கலாம்.
இவ்வாலயத்திலும் ஜனவரி 11 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீபரமபதநாதர் சந்நிதியில் விடியற்காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும், தொடர்ந்து காலை 8 மணி அளவில் உற்ஸவ மூர்த்திகளின் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
மேலும் தகவலுக்கு: 98426 19900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...