தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

விருந்துண்ணும் பிள்ளையார்!

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகருக்கு உச்சிகால வேளையில் பலவிதமான கறிகாய்களுடன் உணவு தயாரித்து நிவேதனம் செய்கிறார்கள்.

Updated On :10 ஜூலை 2014, 12:17 pm

பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகருக்கு உச்சிகால வேளையில் பலவிதமான கறிகாய்களுடன் உணவு தயாரித்து நிவேதனம் செய்கிறார்கள். மனிதர்கள் இலை போட்டுச் சாப்பிடுவதுபோல் விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு தட்டுகளில் நிரப்பி மேளதாள வாத்தியங்கள் முழங்க நைவேத்தியம் செய்வது விசேஷப் படைப்பாகும்.

வாகன நைவேத்தியம்!

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வாகனங்களுக்கும் நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. யானை வாகனத்திற்கு நிறைய வாழைச்சோகை, கரும்பு முதலியனவும் குதிரை வாகனத்திற்கு கொள்ளும் நைவேதனம் செய்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் ஐந்து தலை நாகத்திற்கு அர்த்த ஜாமத்தில் அரவணை என்ற பாலிலேயே செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கின்றனர்.

வீணை இசையிலே நித்திரை!

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சந்நிதி முன் தினமும் இரவில் வீணை வாசிக்கப்படுகிறது. வீணை இசையை கேட்டபடியே பெருமாள் நித்திரை கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.