தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நிலையாமை

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல'.

News image
Updated On :7 நவம்பர் 2014, 9:36 am

பிலோமினா சந்தியநாதன்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல'.

மறுநொடி தாம் வாழ்வது நிலையல்ல என அறியாதவர் எண்ணுகிற எண்ணங்களோ பல கோடி. தெய்வப்புலவர் வள்ளுவர் இவ்வாறு நிலையாமையின் தத்துவத்தைப் பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளில் குறிப்பிடுகிறார். இதே கருத்தை இயேசு பெருமானும் தம் சீடர்களுக்கு ஓர் உவமையின் மூலம் உணர்த்துவதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது.

செல்வனாயிருந்த ஒருவனது நிலம் நன்றாய் விளைந்தது. "நீ விளை பொருள்களைச் சேர்த்து வைக்க போதிய இடமில்லையே எனவே என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, "என் நெஞ்சமே, உனக்கு பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திரு! எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக் கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? எனக் கேட்டார். (912: 16-20 லூக்கா)

ஆம், கடவுளை நினையாது தமக்காகவே செல்வம் சேர்ப்போரின் கதி இதுதான். அழியாத ஆன்மாவைக் கொண்டிருக்கும் நாம், இவ்வுலக வாழ்க்கைக்குப் பிறகு மறுவுலகில் இறைவனோடு இணைந்து நீடித்த பேரின்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தால் இவ்வுலகில் போட்டி ஏது? பொறாமை ஏது?

கோடி கோடியாய்ச் சொத்து சேர்த்து வைக்கும் ஊழல் பெருச்சாளிகள் ஒரு நொடியாவது நிலையாமையை பற்றி சிந்தித்தால் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் இடமேயில்லாது போகும்.

ஆண்டிற்கு ஒருமுறையாவது நிலையாமை பற்றி சிந்தித்து, தன் வாழ்வைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கிறிஸ்துவர்கள் சகல ஆத்தமாக்கள் திருவிழாவை நவம்பர் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர்.

தம் உற்றார் உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று, தீபம் ஏற்றி வழிபட்டு, இறைவனுக்கு அருகில் இருக்கும் பேறு பெற்ற அந்த ஆன்மாக்களை நோக்கி மன்றாடுகிறார்கள். சுத்தம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்திற்கு குருவானவர் சென்று கல்லறைகளை மந்திரிக்கிறார்.

மக்கள் ஆயிரக்கணக்கில் திரிகளை ஏற்றி இறந்துபோன நெருக்கிய உறவினர்களுக்காக, அவர்களின் ஆன்மா சாந்திக்காக மன்றாடும் காட்சியானது, கல்நெஞ்சினையும் உருக வைக்கும்.

இவ்வுலக வாழ்க்கையை ஓர் ஒட்டகப் பந்தயத்திற்கு ஒப்பிடுகிறார் புனித பவுலடியார். நல்லபடியாக, நேரிய வாழ்க்கை வாழும் ஆன்மாக்கள் இப்பந்தயத்தில் வெற்றிபெற்று, அவர்களுக்காக இறைவன் அளிக்கும் வெற்றிவாகையாகிய மோட்ச பேரின்பத்தை தமதாக்கிக் கொள்வர்.

நாமும் மனந்தளராமல் ஓடி வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றி பெற, எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.