எல்லா கோயில்களிலும் சுவாமிக்கு இரண்டு பாதங்கள் இருக்கும். ஆனால் ஒற்றைக்காலை கொண்ட ஏகபாத மூர்த்தி சிலை சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ளது.
அபிஷேகப்பால் தயிராகும் அதிசயம் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் அய்யர்மலை உள்ளது. இங்குள்ள மலைமீது ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. 1017 படிக்கற்களை கடந்து சென்று சிவனைத் தரிசிக்கலாம். சுவாமியின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கின்றனர். அபிஷேகப்பால் இரண்டு மணி நேரத்தில் தயிராக மாறிவிடும். இதையே பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர்.
- ஆர். மகாதேவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







