புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேவன் நல்கும் புத்தாண்டு ஆசீர்வாதம்!

புதிய ஆண்டு நமக்கு நன்மையின் ஆண்டாகவும் புதிய ஆசீர்வாதங்களையும் மேன்மை, நல்ல வருமானம், புதிய உயர்வு, எல்லா நிலைகளிலும் வளர்ச்சி என அனைத்தையும் எதிர்பார்ப்பது இயல்பு. கடந்த ஆண்டில் கர்த்தர் தந்த

News image
Updated On :28 டிசம்பர் 2018, 4:30 am

முனைவர் தே. பால் பிரேம்குமார்

புதிய ஆண்டு நமக்கு நன்மையின் ஆண்டாகவும் புதிய ஆசீர்வாதங்களையும் மேன்மை, நல்ல வருமானம், புதிய உயர்வு, எல்லா நிலைகளிலும் வளர்ச்சி என அனைத்தையும் எதிர்பார்ப்பது இயல்பு. கடந்த ஆண்டில் கர்த்தர் தந்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்வோம். தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்வோம். இன்னும் கடவுளைச் சார்ந்து வரும் புத்தாண்டை வரவேற்போம்.
வேதாகமங்களில் இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டவரின் நிகழ்ச்சி ஒன்று உள்ளது. எலியா என்னும் தீர்க்கதரிசி மிகவும் பக்தியுள்ளவர். ஓடும் யோர்தான் நதியின் கரையில் நின்று தன் சால்வையை எடுத்து ஓடும் தண்ணீரை அடித்து வழி விடு என்பார். ஓடும் தண்ணீர் நின்று தரைவரை வழி விடும். எரியும் அக்கினி ஜுவாலையை வானத்திலிருந்து வர செய்வார். மேகத்தை அழைத்து ஜெபிக்க மலையின் உச்சிக்கு தூக்கிப்போ என்பார். மேகம் கீழ் இறங்கி அவரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லும். இப்படிப்பட்ட வல்லமை மிக்க தீர்க்க தரிசிக்கு ஒரு சீடர் இருந்தார். அவர் பெயர் எலிசா. அவர் தம் குருவைப் பார்க்கிலும் அற்புதம் செய்யவும் வல்லமையாக கர்த்தருக்கு தொண்டு செய்ய விரும்பினார். எலியா தீர்க்கதரிசியின் இறுதி நாள்கள் நெருங்கியது. அவர் தம் சீடர் எலிசாவுடன் யோர்தான் நதியின் கரை வழியே போனார். எலிசா தன் குரு பூமியை கடந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவார் என அறிந்தான். தம் குரு எலியாவை பின்பற்றி விடாது சென்றான்.  அவர்கள் அக்கரைக்குப் போனபின்பு, எலியா, எலிசாவை நோக்கி ""நான் உன்னைவிட்டு எடுத்துக் கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள்'' என்றார். அதற்கு எலிசா,  ""2 -ஆம் இடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வரம் தர வேண்டுகிறேன்'' என்றான். அதற்கு எலியா, "" அரிதான காரியத்தைக் கேட்டாய். உன்னைவிட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்.  இல்லாவிட்டால் கிடையாது'' என்றார். (ஐஐ ராஜாக்கள் 2: 9-10) அவர்கள் பேசிக்கொண்டு நடந்தார்கள். இதோ அக்கினி வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனார். அதை எலிசா கண்டு  "என் தகப்பனே.. என் தகப்பனே.. இஸ்ரவேலுக்கு ரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே!' என்று புலம்பினான். எலியாவை அப்புறம் காணாமல் மேலே பார்த்து ஓடினான். எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை பிடித்து எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான். அது இரு பக்கமாக பிரிந்ததினால் எல்லா ஜனங்களும் எலிசாவை தங்கள் தீர்க்கராக ஏற்றுக்கொண்டனர். எலிசா தம் குருவின் பணி போல மிக வல்லமையாகச் செயல்பட்டார். தம் குருவின் வல்லமைப் பார்க்கிலும் இரட்டிப்பான வல்லமை, அற்புதம், அதிசயம் நிகழ்ந்தது. இஸ்ரவேலரை வழி நடத்தினார். தேசத்தில் செழுமையும் அமைதியும் தெய்வ பக்தியும் வளர்ச்சியும் அடைந்தது.
நன்மை தந்த ஆண்டு முடிந்தது; புதிய ஆண்டு வருகிறது. சென்ற ஆண்டிற்கு நன்றிச் சொல்லி வரும் புதிய ஆண்டு இரட்டிப்பான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். எலியாவைப் போல் வழிநடத்திய சென்ற ஆண்டு சென்றது. எலிசாவைப் போல் இரட்டிப்பான வளர்ச்சி வசதி, வருமானம், மேன்மை மகிழ்ச்சியை கொடுக்கும் புதிய ஆண்டு. உண்மை, கடின உழைப்பு, தெய்வ
பக்தி கொண்டிருந்தால் வரும் ஆண்டு இரட்டிப்பான செழுமை தரும் ஆண்டாகும். தெய்வத்தை மறவாமல் தொழுவோம். கடுமையான உழைப்பை கடைப்பிடிப்போம். எல்லா நிலைகளிலும் உண்மையாக இருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.