ஒரு வார்த்தை சொன்னால் போதும்!
ஒருவர் மீது வைக்கும் பற்று, அன்பு, மதிப்பு, நம்பிக்கையே நம் ஆழ்மனதில் அசைக்க முடியாத பற்றுறுதி உண்டாகின்றது.


ஒருவர் மீது வைக்கும் பற்று, அன்பு, மதிப்பு, நம்பிக்கையே நம் ஆழ்மனதில் அசைக்க முடியாத பற்றுறுதி உண்டாகின்றது. தெய்வத்தின் மேல் நாம் கொள்ளும் பற்றுறுதியே வேதாகமம் விசுவாசம் என்கின்றது. இவ்வாறு இயேசு மீது ஓர் அரசு அதிகாரி ஒருவர் பற்றுறுதிக் கொண்டு கேட்ட விண்ணப்பத்திற்கு பதில் பெற்றுக்கொண்டார்.
இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்த போது நூற்றுக்கு அதிபதி ஒருவன் இயேசுவிடத்திற்கு வந்து "ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டில் திமிர்வாதமாய்க்கிடந்து கொடிய வேதனைப்படுகிறான்' என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு, நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். நூற்றுக்குநூறு அதிபதி பிரதியுத்தாரமாக "ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பார்த்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாக்குவான். என் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருண்டு. நான் ஒருவனைப் போ என்றால் போகிறான். மற்றொருவனை வா என்றால் வருகிறான். என் வேலைக்காரனை இதைச் செய்யென்றால் செய்கிறான்' என்றான். இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அனேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோக ராஜ்யத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பார்களோடு பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகியிருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறேன் என்றார்.
பின்பு, இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி, "நீ போகலாம். நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக் கடவது' என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். (மத்தேயு 8:6-13)
நூற்றுக்கு அதிபதி இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தம் வீட்டிற்கு போனான். என்ன ஆச்சரியம், திமிர்வாதநோயால் நடக்க முடியாத அவன் வேலைக்காரன் பூரண குணமாகி எழுந்து நடந்துக்கொண்டிருந்தான். எப்போது குணமானான் என விசாரித்தபோது, இயேசு தன்னிடம் " நீ போகலாம் நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக் கடவது'' என்று சொன்ன நேரமும் தன் வேலைக்காரன் குணமான நேரமும் ஒன்றே என அறிந்து மகிழ்ந்தான். உயர்பதவியில் இருந்தாலும் தம் வேலைக்காரனுக்குப் பரிதவிக்கும் அந்த நூற்றுக்கு அதிபதி மிகவும் நல்லவராகவும் மற்றும் தானே இயேசுவிடம் நேரில் சென்று இயேசுவிடம் விண்ணப்பம் செய்கின்றதும் போற்றத்தகும். முதலாளி, தொழிலாளி, ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கின்ற வேறுபாடு பார்க்கிறவன் மனிதநேயன் அல்லர். வேறுபாடு காணாமல் அன்பு செய்து நல்லெண்ணம் கொண்டு உதவும் நற்குணத்தை இயேசு பாராட்டினார். இத்தகைய நற்பண்பை நாமும் பெறுவோம். மற்றவர் நலனில் அன்பு கொள்வோம். பிறர் நலம் தேடுவோர் கடவுளால் போற்றப்படுவர். நாமும் பிறர் நலன் தேடுவோம். தேவனின் ஆசீர்வாதம் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...