தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேதுருவை அழைத்த இயேசு

திரும்பிப் போதல், பின்வாங்கிப் போதல் என்ற சொல் விரும்பப்படாத வார்த்தை. தொடர்ந்து செய்ய முடியாமை, தோல்வி வந்து விடுமோ, என்னால் முடியாது எனச் சோர்வு கொள்ளுதல், பலமின்மை, ஆர்வம் குறைவு, மற்றவரின்

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 2:18 pm

முனைவர் தே. பால் பிரேம்குமார்

திரும்பிப் போதல், பின்வாங்கிப் போதல் என்ற சொல் விரும்பப்படாத வார்த்தை. தொடர்ந்து செய்ய முடியாமை, தோல்வி வந்து விடுமோ, என்னால் முடியாது எனச் சோர்வு கொள்ளுதல், பலமின்மை, ஆர்வம் குறைவு, மற்றவரின் ஆதரவு இல்லை என உணர்தல், உடலும் உள்ளமும் ஆன்மாவும் சோர்ந்து போய் ஒரு பணியை, கொள்கையை விட்டு விட்டு பின் வாங்கி போதலையே குறிக்கும். இதனால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். வெற்றியின் அருகே சென்றும் பின் வாங்கிப்போனால் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம்.
கிணறு வெட்டத் தொடங்கியவர் குறிப்பிட்ட ஆழம் வெட்டியும் தண்ணீர் ஊற்று கிடைக்கவில்லை என வெட்டுதலை விட்டு விட்டார். நிலத்தையும் குறைந்த விலைக்கு விற்று விட்டார். விலைக்கு வாங்கினவர் வெட்டிய கிணற்றை மேலும் ஆழப்படுத்துதலை தொடர்ந்து, ஓர் அடி ஆழம் தான் வெட்டினார். ஊற்று பீறிட்டுக் கொண்டு தண்ணீர் வந்தது. தொடராமல் விட்டுவிட்டவர் இழந்தார்; ஆனால் திரும்பத் தொடர்ந்தவர் வெற்றியைக் கண்டார்.  மனிதர் வாழ்வில் தொடர்ந்து பணியாற்றுபவர் வெற்றியையும் புகழையும் பெறுவார். விட்டுவிடுபவர் வெற்றியை இழந்து  விடுவார். 
வேதாகமத்தில் இறை அன்பில் தொடர்ந்தவர்கள் வெற்றியுள்ள ஊழியக்காரராக வரலாறு படைத்துள்ளனர். ஆண்டவராகிய இயேசு தம்முடன் பன்னிரண்டு சீடர்களை பயிற்றுவித்து தமக்கு பின் தன் ஊழியத்தை தொடர தம்முடன் வைத்திருந்தார். அதில் பிரதான சீடர் பேதுரு ஆவார். அவர், இயேசுவிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தார். ஆனால் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்று போட்டனர். மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார். 
யூதர்களுக்கு பயந்த பேதுரு திரும்ப தன் பழைய தொழிலாகிய மீன் பிடி தொழிலுக்குச் செல்வதாகக் கூறி தன் நண்பர்கள் மற்ற சீடருடன் நடுஇரவில் மீன் பிடிக்கச் சென்றார். என்ன ஆச்சரியம்! அவர் வலையில் ஒரு மீன் கூட சிக்கவில்லை. இரவெல்லாம் வலை வீசி வீசி ஒன்றும் கிடைக்கவில்லை. பொழுது விடிய ஆரம்பித்தது.  
பெரிய ஏமாற்றம், வலை வீசிய கைகளில் வலி. விடியற்காலையே கரை திரும்பினர். கரையில் உயிர்த்த இயேசு நின்றார்.  " பிள்ளைகளே! புசிக்கிறதுக்கு உங்களிடத்தில் ஏதாகிலும் உண்டா' என்றார். அதற்கு சீடர்கள் "ஒன்றுமில்லை!' என்றார்கள். அப்பொழுது அவர் " நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையை போடுங்கள்' என்றார். அப்படியே  அவர்கள் போட்டு திரளான மீன்கள் அகப்பட்டதினால் அதை இழுக்க மாட்டாதிருந்தார்கள் (யோவான் 21:5,6) .
கரையில் தங்களுடன் பேசியவர் இயேசு என அறிந்தனர். கரையில் கரிநெருப்பு எரிகிறதும் அதன்மீது மீன்கள் சுடப்பட்டு, அப்பமும் இருப்பதைக் கண்டார்கள். இயேசு அவர்களை உண்ண வைத்தார். பேதுருவும் மற்ற சீடர்களும் மிகப்பெரிய தைரியம் கொண்டனர். இயேசு தம் குரு உள்ளார் பயப்பட தேவை இல்லை. இயேசுவின் பணியைத்  தொடர்வோம் என உறுதி கொண்டனர்.
இயேசு பேதுருவை அழைத்து, "யோனாவின் குமாரனாகிய சிமோனே! என்னில் அன்பாயிருக்கிறாயா?' என்றார். பேதுரு, " ஆம், ஆண்டவரே,  அன்பாயிருக்கிறேன் என்பதை நீர் அறிவீர்' என அழுகுரலில்  கூறினார். "என் ஆடுகளை, ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக' என்று மூன்று தரம் வினாவி பேதுருவிடம், பதில் பெற்று ஊழியம் செய்யும்படி பணித்தார். 
பேதுரு மிகப்பெரிய தைரியம் பெற்று, இறைபணியைச் செய்தார். முன்னேறி செல்வதற்கே நம்மை இயேசு அழைக்கின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.