சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவன் கொடுத்​ததை தேவ​னுக்கே கொடுத்த அன்​னாள்

தாய்மை என்​பது பெரும் பாக்​கி​யம். பிள்​ளைச் செல்​வம் ஒரு பெரும் செல்​வம். திரு​மண வாழ்​வில் ஒரு பெண், பிள்​ளை​யைப் பெற்​றுக்​கொள்​வது மிக மகிழ்​வான நிகழ்ச்சி.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2020, 6:30 pm

எம்.ஜி. நிர்​மலா

தாய்மை என்​பது பெரும் பாக்​கி​யம். பிள்​ளைச் செல்​வம் ஒரு பெரும் செல்​வம். திரு​மண வாழ்​வில் ஒரு பெண், பிள்​ளை​யைப் பெற்​றுக்​கொள்​வது மிக மகிழ்​வான நிகழ்ச்சி.
பெற்​ற​வர்​கள் "தாய், தந்தை' எனப் போற்​றப்​ப​டு​கின்​ற​னர். மகப்​பேறு மருத்​து​வர்​கள் "பெண்​ணின் கர்ப்​பத்​தில் சிசு வளர்ச்சி பெறு​வதை ஓர் அற்​பு​தம்' என்​பர். இவ்​வு​ல​கி​னர் பிள்ளை பெற்​றுக் கொள்​ளா​த​வரை "மலடி' எனப் பெயர் சூட்டி சிறு​மைப் படுத்​து​வர். 
வேதா​க​மத்​தில் தாய்மை அடை​யாத அன்​னாள் என்ற பெண்​ணின் வர​லாறு உள்​ளது. கி.மு. 350 ஆண்​டு​க​ளுக்கு முன்பு இஸ்​ர​வேல் நாட்டில் ராம தாயீம் என்ற மலை ஊரில் எல்க்​கானா என்​ப​வர் தனது இரு மனை​வி​க​ளு​டன் தெய்வ பக்தி மிக்​க​வ​ராக வாழ்ந்​தார். முதல் மனைவி அன்​னாள். இரண்​டாம் மனைவி பெனின்​னாள்.
அன்​னா​ளுக்கு பிள்​ளை​கள் இல்லை. பெனின்​னா​ளுக்கு பிள்​ளை​கள் பலர் பிறந்​த​னர். அன்​னாளை மலடி என்று எல்​லோ​ரும் ஏள​ன​மா​கப் பேசி​னர். அவள் மிக​வும் நொந்து போனாள். தெய்​வத்​தி​டம் மிக பக்​தி​யு​டன் விண்​ணப்​பம் செய்து வந்​தாள். எல்க்​கானா அன்​னாளை மிக​வும் நேசித்​தார். என்ன இருந்​தா​லும் மலடி என்​பது அவ​ருக்கு பெரும் துன்​ப​மாக இருந்​தது. 
யூத பெண்​க​ளின் வழக்​கப்​படி அன்​னாள் எல்லா தெய்வ வழி​பா​டு​க​ளை​யும் சிரத்​தை​யு​டன் கைக் கொண்​டாள். உண்ணா நோன்​பும், விர​த​மும் அவள் வாழ்​வில் முக்​கிய இடத்​தைப் பிடித்​தது.
எல்க்​கானா தன் குடும்​பத்​து​டன் சீலோ என்ற ஊரி​லுள்ள ஆல​யத்​துக்கு ஆண்​டு​தோ​றும் சென்று பலி​யிட்டு தேவனை ஆரா​திப்​பது வழக்​கம். மாமி​சம், திராட்சை ரசம், கோதுமை அப்​பம், பணம் இவற்​றைப் பங்​கிட்டு தம் மனை​வி​க​ளுக்​கும், பிள்​ளை​க​ளுக்​கும் கொடுப்​பார். அன்​னாள் மட்டும் உண்​ணா​மல் அழு​து​கொண்டே தன் குறை தீர வில்லை என 
வேத​னைப்​ப​டு​வாள்.
அன்​னாள் தனி​யாக ஆலய வாயிற்​ப​டி​யில் மிக​வும் பணி​வு​ட​னும், பக்​தி​யு​ட​னும் இறை​வன் முன்பு விழுந்து அழுது தேவ​னி​டம் பிரார்த்​தனை செய்து கொண்​டாள். ""எனக்​கோர் ஆண் குழந்​தை​யைக் கொடுத்​தால், அப்​பிள்ளை தாய்ப்​பால் மறந்​த​வு​டன் இவ்​வா​ல​யத்​தில் உனக்​குத் தொண்டு செய்ய கோயில் பிள்​ளை​யா​கக் கொடுத்து விடு​வேன்'' என்​றாள். 
அவள் விண்​ணப்​பம் கேட்கப்​பட்​டது. 
​பி​ன்பு அவள் தன்​னு​டைய ஊருக்​குச் சென்ற பொழுது கர்ப்​பம் தரித்​தாள். ஆம்... அவள் தெய்​வத்தை வேண்​டிக் கொண்​டது போல் ஓர் அழ​கான ஆண் மக​வைப் பெற்று அதற்கு "சாமு​வேல்' என்று பெய​ரிட்​டாள். 
அப்​பெ​ய​ருக்கு தெய்​வத்​தி​டம் பிச்சை கேட்டு வேண்​டு​த​லு​டன் பிறந்​த​வன் என்று அர்த்​தம். பிள்ளை வளர்ந்​த​போது அன்​னாள் ""அவன் ஆல​யத்​தின் பிள்ளை. அவன் நச​ரேய விர​தம் உள்​ள​வன். பிள்​ளை​யின் தலை​முடி சவ​ரக் கத்​தி​யால் சிரைக்​கப்​ப​டக்​கூ​டாது'' என்று தன் கண​வ​ரி​டம் கூறி​னாள். பின்​னர் தம் கண​வ​ரு​டன் சீலோ​வி​லுள்ள ஆல​யத்​துக்கு மகனை அழைத்து வந்​தாள். ஒபேத் என்​னும் சணல் ஆடையை (அங்கி) அவ​னுக்கு அணி​வித்து விட்டு, அந்த ஆல​யத்​தின் ஆசா​ரி​ய​னி​டம் ""நான் நேர்ந்து கொண்டு பெற்​றெ​டுத்த என் அழகு, அன்பு, என் குறை தீர்த்த சாமு​வேலை உம்​மி​டம் ஒப்​ப​டைக்​கி​றேன். இப்​பிள்ளை இவ்​வா​ல​யத்​தில் வள​ரும். இனி சாமு​வேல் என் பிள்ளை இல்லை; நச​ரேய விர​த​முள்ள தெய்​வப் பிள்ளை'' என்று கூறி ஐந்து வய​து​டைய சாமு​வேலை தெய்​வத்​துக்கே கொடுத்து விட்டாள்.
​ஆ​ண்​டு​தோ​றும் அங்கு வழி​பட வரும்​போது சாமு​வே​லுக்கு ஒபேத் என்ற அங்​கியை தைத்து வந்து தரு​வாள். பின்​னர் அன்​னா​ளுக்கு ஏழு பிள்​ளை​கள் பிறந்​த​னர். சாமு​வேல் தெய்​வப் பிள்​ளை​யாய் ஏலி ஆசா​ரி​ய​னி​டம் வேதம் கற்று, தின​மும் தெய்​வத்​துக்கு ஆரா​த​னை​கள் செய்து வந்​தான். பார்ப்​போர் எல்​லாம் இந்​தச் சிறு பைய​னின் தெய்வ பக்​தி​யைக் கண்டு வியந்​த​னர். இன்​றும் அன்​னாள் வர​லாறு மிக​வும் பக்​தி​யு​டன் படிக்​கப்​ப​டு​கி​றது. தெய்​வத்​துக்கே தான் பெற்ற பிள்​ளை​யைத் தந்த அன்​னாளை போற்​று​வோம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.