தொள்ளாயிரம் காத்த விநாயகர்
சென்னை பொன்னேரி தாலுக்கா மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியில் தொள்ளாயிரம் காத்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது.


சென்னை பொன்னேரி தாலுக்கா மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியில் தொள்ளாயிரம் காத்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது.
ஒருசமயம் நவாப்புகள் படையெடுத்து வந்தபோது இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொல்லை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க 900 பேர் ஒன்றுகூடி இங்குள்ள விநாயகர் கோயில் அருகே உள்ள புதரில் மறைந்துகொண்டனர்.
நவாப் படையினர் அங்கு மக்கள் யாரும் இல்லையென்று கருதிச் சென்றுவிட்டனர். அங்கிருந்த 900 பேரைக் காத்து அருளியதால் "தொள்ளாயிரம் காத்த விநாயகர்' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
வேறொரு சமயம் கடும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான சூழலில் இங்குள்ள மக்கள் 900 பேர் பாதுகாப்பான இடம் தேடி விநாயகர் கோயில் பகுதியில் தஞ்சம் புகுந்ததாகவும், அதனால் தொள்ளாயிரம் காத்த விநாயகப் பெருமான் என்று பெயர் வந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
இந்தக் கோயில் வளாகத்திலேயே அருள்மிகு அபிராமியம்மன் சமேத அமிர்கடேஸ்வரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கே 60 வயது பூர்த்தியான தம்பதிகள் வந்து மணிவிழா நடத்துவதை விசேஷமாகக் கருதுகின்றனர்.
நாகர் சிலை அற்புதமாக அமைந்துள்ளது. இங்கு பெüர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் குழந்தைப்பேறு இல்லாதோருக்கு மழலைச் செல்வம் அமையும் என்பது நம்பிக்கை.
துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர் சுவாமிகள் சங்கு சக்கரத்தில் காட்சி தருகிறார்கள். நவகிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது.
சிவாலயம் அமைக்கும் பணி, அம்பாள் விமானம், சுதை வேலைகள், குளம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை விரைவில் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஸ்ரீதொள்ளாயிரம் காத்த விநாயகர் பக்த ஜன சபா குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருப்பணி தொடர்பான விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள: என்.பி.அருணாசலம், எஸ்.மோகன சுந்தரம் - 9840768234 / 9841633938.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...