சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சஞ்​சீவி பாக​வ​தர் நூற்​றாண்டு!

திரு​வை​யா​றில் தியா​கப்​பி​ரும்​மம் தியா​க​ரா​ஜ​ரின் ஜயந்​தி​யைப் போலவே, புதுக்​கோட்​டை​யில் ஆண்டு தோறும் மே மா​தத்​தில் நடை​பெ​றும் ஸ்ரீலட்​சுமி நர​சிம்ம ஜயந்தி மகோற்​ச​வத்​தில் இந்​தி​யா​வின் பல பக

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:30 am

பி.வி.​அ​னந்த நாரா​ய​ணன்

திரு​வை​யா​றில் தியா​கப்​பி​ரும்​மம் தியா​க​ரா​ஜ​ரின் ஜயந்​தி​யைப் போலவே, புதுக்​கோட்​டை​யில் ஆண்டு தோறும் மே மா​தத்​தில் நடை​பெ​றும் ஸ்ரீலட்​சுமி நர​சிம்ம ஜயந்தி மகோற்​ச​வத்​தில் இந்​தி​யா​வின் பல பகு​தி​க​ளில் இருந்தும் ஆயி​ரக் கணக்​கா​னோர் வந்து பங்​கேற்​றுச் சிறப்​பிப்​பார்​கள். 

நாம சங்​கீர்த்​தன இசைக்​க​லை​ஞர்​கள்  ஒன்​று​சே​ரும் இந்த நர​சிம்ம ஜயந்தி மகோற்​ச​வத்தை புதுக்​கோட்​டை​யில் பூஜ்​யஸ்ரீ கோபா​ல​கி​ருஷ்ண பாக​வத சுவாமி 1919-இல் தொடங்கி வைத்​தார். அவ​ரைத் தொடர்ந்து அவ​ரது புதல்​வர் ஸ்ரீசஞ்​சீவி பாக​வத சுவா​மி​கள் நடத்தி வந்​தார். இந்த மகோற்​ச​வத்​தின் நூற்​றாண்டு விழா கடந்த 2019-இல் நடை​பெற்​றது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.  

கடந்த 1920 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி பிறந்த சஞ்​சீவி பாக​வ​தர், தனது தாய் மங்​கள நாயகி அம்​மா​ளின் வயிற்​றில் வள​ரும் பொழுதே ராம நாம சங்​கீர்த்​த​னத்​தைக் கேட்டு வளர்ந்​த​வர். சங்​கீ​தத்​தி​லும், பஜ​னை​யி​லும் தந்​தை​யி​டம் பயிற்சி, தேர்ச்சி பெற்​றார். 

இளம் வய​தில் பல கிலோ​மீட்​டர் தூரம் வெறுங்​கா​லு​டன் நடந்து சென்று பஜனை  மூல​மாக  பக்​தி​யைப் பரப்​பி​னார். பின்​னர், பேருந்து மற்​றும் ரயில் வச​தி​கள் வந்​த​பி​றகு தேசத்​தின் பல ஊர்​க​ளுக்​கும் சென்று பஜனை மூல​மாக பக்தி நெறி​யூட்​டி​னார்.  

யாரி​ட​மும் அவர் எந்த வித்​தி​யா​ச​மும் பார்க்​கா​மல் அனை​வ​ரை​யும் பாட வைப்​பார். குடும்​பத்​தில் ஒவ்​வொ​ரு​வ​ரும் கலி​யு​கத்​தில் கட​வுளை அடை​வ​தற்கு எளி​தான வழி​முறை பக​வான் நாமத்தை உச்​ச​ரிப்​பதே என்​பதை அனை​வ​ரி​ட​மும் வலி​யு​றுத்​து​வார். 

அவர் பய​ணம் செய்​யாத சம​யங்​க​ளில், தனக்கு வரும் ஒவ்​வொரு கடி​தத்​திற்​கும் அவர் தனிப்​பட்ட முறை​யில் பதி​ல​ளிப்​பார். கட​வுள் மீது கொண்​டி​ருந்த ஆழ்ந்த பக்​தி​யின் மூலம் புத்​தி​சா​லித்​த​ன​மான ஆலோ​ச​னை​க​ளை​யும், பிரச்​னை​க​ளி​லி​ருந்து விடு​ப​டு​வ​தற்கு  நல்ல உபா​யங்​க​ளை​யும் சொல்​லு​வார். 

சஞ்​சீவி பாக​வத சுவாமி  திட​மான  உறு​தி​யும், மிகுந்த சமத்​து​வ​மும் கொண்​ட​வர். அவர் ஒரு வைராக்ய புரு​ஷர். நிர்​ண​யித்த அன்​றா​டக் கட​மை​களை (நித்​ய-​கர்மா)  ஒரு​நாள் கூடத் தவற விட்ட​தில்லை.  

அவர் காலை​யில் உஞ்​ச​வி​ருத்தி பஜனை செய்து, வீடு வீடா​கச் சென்று  ஆசீர்​வா​தங்​களை வழங்​கு​வார். ஒவ்​வொரு வீட்டி​ன​ரின் நல​னுக்​கா​க​வும் ஜபம் செய்​வார். பிறகு மாலையில் நாம சங்​கீர்த்​த​னத்​தைத் தொடங்​கு​வார்; இது பெரும்​பா​லும் அடுத்​த​நாள் அதி​காலை வரை​யில் தொட​ரும். 

அவ்​வ​ளவு நீண்ட நேரம் அவர் நாம சங்​கீர்த்​த​னத்தை நிகழ்த்​து​வது  நம்​மைப் பிர​மிக்​கச் செய்து பர​வ​சத்தை ஏற்​ப​டுத்​தும். பக்தி உணர்ச்​சி​யைத் தூண்​டும் மனப்​பான்​மை​யு​டன் அவர் அதைச் செய்​வார். அவ​ரைச் சந்​தித்த அனை​வ​ருக்​கும் அது ஒரு சுகா​னு​ப​வ​மாக அமை​யும்.  

பஜனை சம்​பி​ர​தா​யத்​திற்கு வழி வகுத்​த​வர். கர்​நா​டக இசை​யின் பல நுணுக்​கங்​களை அறிந்​தி​ருந்​தா​லும் அவ​ரது குரல் வளம், எளிய நடத்தை, உணர்ச்​சி​வ​ச​மா​கப் பாடும் விதம் இவை​ய​னைத்​தும் இணைந்து கேட்போரை எல்​லாம் மகிழ்​வித்து புத்​து​ணர்​வ​ளிக்​கும்.

பஜ​னை​யில்  அவ​ருக்கு நேரக் கட்டுப்​பா​டு​கள் எது​வும் இருக்​காது. பணத்தை எதிர்​பார்த்​த​தில்லை. வேறு எந்த வரு​மான ஆதா​ய​மும் இல்​லாத போதி​லும், அவர் ஆயி​ரக்​க​ணக்​கான மக்​க​ளுக்கு உண​வ​ளிப்​பார்.  தேவைப்​ப​டு​ப​வர்​க​ளுக்கு பண உத​வி​யும் செய்​வார். அவர் கிர​ஹஸ்​த​ரின் உடை​யில் ஒரு துற​வி​யாக இருந்​தார். ஸ்ரீமத் பாக​வ​தத்​தில் வரை​ய​றுக்​கப்​பட்ட ஒரு உண்​மை​யான பாக​வ​த​ருக்கு உதா​ர​ண​மாக  அவர் விளங்​கி​னார். கட​வுளை அடை​வது ஒன்றே குறிக்​கோ​ளாக நிரா​ப​க்ஷம், முனிம், சாந்​தம், நிர்​வ​ரம், சம​தர்​ஷ​னம் போன்​றவை அமைந்து அவ​ரின் ஒவ்​வொரு செய​லி​லும் இந்த அருங்​கு​ணங்​கள் வெளிப்​பட்​டன. 

சஞ்​சீவி பாக​வ​தர் ஆசார சீலர், அனுஷ்​டான புரு​ஷர், தப  பலம் உடை​ய​வர். தன்​னு​டைய பஜனை பக்தி மார்க்​கத்​தி​னால் பாமர மக்​க​ளுக்​கும் நல்​வழி காட்டி​ய​வர். கடந்த 2001-ஆம் ஆண்டு செப்.28-​இல் ஜீவ​ச​மாதி அடைந்​தார். இம்​ம​கா​னின் 100 -ஆவது பிறந்​த​நா​ளைக் கொண்​டா​டும் இவ்​வே​ளை​யில்  அவரை மன​தில் பிரார்த்​தித்து அவ​ரது ஆசி​க​ளைப் பெறு​வோ​மாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.