தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறந்த பரிசு குழந்தை இயேசு

கர்த்தர் மனிதருக்கு கொடுத்த மிக சிறந்த பரிசு குழந்தை இயேசு ! குழந்தைச் செல்வம், எல்லா செல்வங்களிலும் மிகச் சிறந்தது. குழந்தை நல மருத்துவர்கள் சொல்வார்கள் குழந்தை பிறப்பு ஒவ்வொன்றும் அற்புதம்! பிறந்த ஒ

News image
Updated On :17 ஜனவரி 2020, 2:01 pm

முனைவர் தே. பால் பிரேம்குமார்

கர்த்தர் மனிதருக்கு கொடுத்த மிக சிறந்த பரிசு குழந்தை இயேசு ! குழந்தைச் செல்வம், எல்லா செல்வங்களிலும் மிகச் சிறந்தது. குழந்தை நல மருத்துவர்கள் சொல்வார்கள் குழந்தை பிறப்பு ஒவ்வொன்றும் அற்புதம்! பிறந்த ஒவ்வொரு குழந்தையிடமும் இருநூறு செயல்பாடுகள் அதனுள் அடங்கியுள்ளது. மூச்சு விடுகிறது, பார்க்கிறது, கேட்கிறது, அழுகிறது, காலாட்டுகிறது,

யாட்டுகிறது, ஜீரணிக்கிறது. இப்படியான செயல்பாடுகளுடன் இப்பூமிக்கு வருகிறது. மானிடராய் பிறத்தல் அரிது என்கிறது முதுமொழி.

வேதாகமம், {""இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்;  கர்ப்பத்தின் கனி, அவரால் கிடைக்கும் பலன்'' (சங்கீதம் 127:4) பிள்ளைகள் பெற்றோருக்கு "அம்மா', "அப்பா' பட்டத்தைத் தருகிறார்கள். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி அக்குடும்பத்தின் பிள்ளை மூலமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. 

மரியாளும் யோசேப்பும் குழந்தை இயேசுவை மிக அன்புடன் வளர்த்தனர். இயேசுவும் தம் பெற்றோருக்கு கீழ்படிந்திருந்தார். இயேசு வளர்ந்து ஆவியிலே பலம் கொண்டு ஞானத்தினால் நிறைந்தது; தேவனுடைய கிருபையும் அவர் மேல் இருந்தது. அவருடைய தாய் தகப்பனார் ஆண்டுதோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போனார்கள். 

அவருக்கு  பன்னிரண்டு வயதானபோது அவர்கள் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். பண்டிகை நாள்கள் முடிந்து திரும்பி வருகிறபோது பிள்ளையாகிய இயேசு எருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. இயேசு பிரயாணக்காரர்கள் கூட்டத்திலே இருப்பாரென்று நினைத்து ஒருநாள் பிரயாணம் வந்து  உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் தேடினார்கள். காணாததினாலே அவரைத்தேடிக் கொண்டே எருசலேம் வரை சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின்பு அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களுடன் வினாவவும் கண்டார்கள். அவர் பேச்சைக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன கருத்துகளையும் குறித்துப் பிரமித்தார்கள். தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது, அவருடைய தாயார் அவரை நோக்கி,  ""மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ... உன் தந்தையும் நானும் வருத்தத்தோடே உன்னைத் தேடினோமே'' என்றார்.

அதற்கு  இயேசு, ""நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள். என் பிதாக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதனை 
அறிவீர்களா?'' என்றார். 

பின்பு, இயேசு அவர் தாய் தந்தையுடன் நாசரேத்தில் அவர்களுடன் வாழ்ந்தார். இயேசுவானவர் ஞானத்திலும் வளர்த்தியிலும்  தேவகிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமதிகமாய் வளர்ந்தார்.

குழந்தையாக கடவுளே பிறந்து மனிதருக்கு பெருமை சேர்த்தார். முப்பது வயது வரை இந்த உலகத்தில் சாதாரண மனிதராகவே தம்மை காண்பித்தார். எல்லாம் எனக்குத் தெரியும், நான் கடவுள் என்று எண்ணாமல் நம்மைப்போல் வாழ்ந்து தம் இறைப்பணியை செய்தார்.

நாம் குழந்தைகளை போற்றுவோம். பெற்றோரின் அன்பு, பிள்ளைகளை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும். குழந்தைகள் நம் குடும்பத்தின் வாரிசு மட்டும் அல்ல. அவைகள் நமது செல்வங்கள். செல்வ செழிப்பும் வளமும் மேன்மையும் உயர்வும் குழந்தைகள் மூலம் கர்த்தர் அருளுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.