கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேவன் நோவாவுக்கு தந்த வானவில் அடையாளம்

கடவுள் நமக்கு பல அடையாளங்களைத் தந்துள்ளார். அடையாளங்கள் நமக்கு வழிகாட்டும், எச்சரிக்கும், நல்வழிப்படுத்தும்.

News image
Updated On :5 ஜூன் 2020, 4:03 pm

முனைவர் தே. பால் பிரேம்குமார்

கடவுள் நமக்கு பல அடையாளங்களைத் தந்துள்ளார். அடையாளங்கள் நமக்கு வழிகாட்டும், எச்சரிக்கும், நல்வழிப்படுத்தும்.
தெய்வம் தம் அடையாளமாகிய தம்முடைய சாயல் (உருவத்தை) தந்துள்ளார். அவரின் அன்பின் அடையாளமாக நமக்கு ஜீவ சுவாசத்தைத் தந்துள்ளார். நமது ஆன்மா கடவுளின் அடையாளமாகும். மற்றெல்லா ஜீவராசிகளைப் பார்க்கிலும் நாம் சிறந்தவர்கள் என்பது நாம் அவரின் படைப்பே ஆகும்.
ஆதாம் ஏவாள் வீழ்ச்சிக்குப் பின்பு அவர்களின் அன்பு மகன்கள் காயீன், ஆபேல் இப்புவி வாழ்வை ஆரம்பித்தனர். பொறாமையால் காயீன் தன் அன்பு தம்பியைக் கொன்று போட்டான். 
கொலைப் பாவம் காயீனுக்கு மிகக் கடினமான வாழ்வைத் தந்தது. இப்பூமி சபிக்கப்பட்டதால் மனிதரின் வாழ்வு சீர்கேடாயிற்று. எல்லாத் தீமையும் சன்மார்க்கம் இல்லாத வாழ்வும் மிகுந்து தெய்வ பயமும் அற்றுப் போயிற்று.
நெறி தவறிய வாழ்வு, விபச்சாரம், ராட்சதர்கள் மனிதருடன் உறவு கொண்டு இப்பூமி மிகச் சீர்கேடு ஆனது.
கர்த்தர் மனிதரின் சீர்கேடான வாழ்வு கண்டு மனஸ்தாபப்பட்டார். அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது (ஆதியாகமம் 6: 6).
மனஸ்தாபப்பட்ட கர்த்தர் இப்பூமியிலுள்ள தாம் படைத்த எல்லாவற்றையும் அழிக்கத் திட்டமிட்டார்.
ஆனால், இப்பூமியில் வாழ்ந்த நோவா என்பவர் தம் அன்பு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். 
நோவாவுக்கோ கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது. 
கர்த்தர் நோவாவிடம் பேசி ஒரு பெரிய பேழையைக் கட்டச் சொன்னார். கொப்பேர் மரத்தால் நீள, அகலம், உயரம் மற்றும் உள்ளமைப்புப் பற்றி நோவாவிடம் கூறினார். இப்பெரிய பேழையைக் கட்டும் வேலையை நோவா தன் பிள்ளைகளுடன் மேற்கொண்டார். 
பூமியில் வாழும் மனிதர்கள் தரையில் கட்டும் கப்பலைக் கண்டு ""நோவா பைத்தியக்காரனோ?'' என்றனர்.
நோவா கடவுளின் அழிவுத் திட்டத்தை மக்களிடம் கூறியும் அவர்கள் தங்கள் துன்மார்க்க வழியை விட்டு தெய்வத்திடம் மனம் திரும்பவில்லை. 
பேழைக்குள் நோவாவின் குடும்பம் உலகத்தில் உள்ள சகல ஜீவராசிகளின் ஆண்-பெண் என ஒரு ஜோடியை பேழைக்குள் நோவா வரவழைத்துக் கொண்டார்.  பேழையின் கதவு மூடப்பட்டது. 
பூமியின் மீது 40 நாள்கள் பெரும் மழை பொழிந்தது. பூமியின் ஊற்றுக்கள் ஊற்றெடுத்தன. பேழை மிதக்க ஆரம்பித்தது. பூமியில் வாழ்ந்த சகல ஜீவராசிகளும் பெரும் மழையால் அழிந்தன. 
பேழைக்குள் இருந்த நோவா குடும்பம் மற்றும் ஆண்- பெண் ஜீவராசிகள் உயிர் தப்பின. 150 நாள்களுக்குப் பின் தண்ணீர் வடிந்தது. 
பூமி மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியா..? என அறிய ஒரு காகத்தையும், புறாவையும் வெளியே அனுப்பிப் பார்த்தார். சிலநாள்களுக்கு வருவதும் போவதுமாக இருந்த காகமும், புறாவும் திரும்பி வரவில்லை. 
எனவே கர்த்தரின் கட்டளைப்படி பேழையின் கதவை திறந்தார். இப்பூமி புதிய வடிவம் கொண்டு நோவாவின் குடும்பத்துடனும் மற்ற ஜீவராசிகளுடனும் வாழத் தொடங்கிற்று.
நோவா கர்த்தருக்கு பலி செலுத்தித் தொழுது கொண்டார். கர்த்தர் நோவாவிடம் உடன்படிக்கை செய்து கொண்டார். இனி மனிதரை அழிக்க மாட்டேன். மழைபொழியும். விதைப்பும் அறுப்பும் தொடரும். 
இதற்கு அடையாளமாக வானத்தில் வானவில்லை வைத்தார். ஏழு வண்ணங்கள் கடவுளின் அண்மையை நமக்குத் தெரியப்படுத்துகிறது. 
இப்பூமியில் ஒருவர் சன்மார்க்கமாக வாழ்ந்ததனால் பூமியில் நாம் இன்று வாழ்கின்றோம். வானவில் தோன்றும் போதெல்லாம் கர்த்தரைப் போற்றுவோம்; அவர் அருள் நம்மோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.