தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேவன் ஆபிரகாமை சோதித்தார்

சோதித்தல் அல்லது பரீட்சை செய்து பார்த்தல் நல்லது. சோதிக்கும் போது நல்லது கெட்டது அறிய முடியும். தரம், தன்மை, நம்பகத்தன்மை, குணம், நீடித்த தன்மை அறிய முடியும்.

News image
Updated On :19 ஜூன் 2020, 1:46 pm

முனைவர் தே. பால் பிரேம்குமார்


சோதித்தல் அல்லது பரீட்சை செய்து பார்த்தல் நல்லது. சோதிக்கும் போது நல்லது கெட்டது அறிய முடியும். தரம், தன்மை, நம்பகத்தன்மை, குணம், நீடித்த தன்மை அறிய முடியும். தேவன் தம் மக்களை சோதனை மூலம் சோதிக்கப்பட்டவர் தம்மைப் பற்றி அறியச் செய்கிறார். 
புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், அதைப் பல மிருகங்களுக்கு கொடுத்து அதனால் வரும் குணமாக்கும் தன்மை மற்றும் அம்மருந்து தீமை உண்டாக்குகிறதா என சோதித்து மனிதருக்கு கொடுக்கப்படுகிறது. பொன்னானாலும் தட்டான் அதன் உண்மைத் தன்மையை உரைகல்லில் தேய்த்து அறிகிறார்.
வேதாகமத்தில் தேவன் தம் பக்தனை சோதித்து அறிகின்றார். அவர் நல்லவர்தான் என தெய்வம் அறிந்திருந்தாலும் மற்றவர் அச்சோதனையைக் கண்டு தன்னை சரிப்படுத்திக் கொள்ள முடியும். பாபேல் கோபுரம் நிகழ்ச்சிக்குப் பின்பு மக்கள் தம் தம் மொழி பேசுவாருடன் சேர்ந்து உலகமெங்கும் பரவினர். இப்படி பரவினவர்கள் படைப்பின் கடவுளை மறந்து படைப்புகளைத் தொழுது கொண்டனர். ஆனால் ஆபிரகாம் எனும் இளைஞர் "படைப்புகள் தெய்வம் ஆகாது, படைத்தவர் கர்த்தர் ஒருவரே கடவுள். அவரை மட்டும் நான் தொழுவேன்' என கர்த்தரைத் தொழுது கொண்டார்.
ஆபிரகாமை கர்த்தர் தான் காட்டும் தேசத்துக்கு வரும்படி பணித்தார். கானான் எனப்படும் தேசத்துக்கு அழைத்துச் சென்றார். வானத்து நட்சத்திரங்கள் போல் உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்றவர், அவருக்கும் அவர் மனைவி சாராவுக்கும் 100 வயது, 90 வயது ஆன பின்பும் குழந்தை இல்லை. இவ்வயதில் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார்.
"ஈசாக்கு' எனப் பெயரிட்டு வளர்த்தார். தன் மகனிடம் மிக அன்பு கொண்டிருந்தார். கர்த்தர் ஆபிரகாமின் கனவில் தோன்றி ""ஈசாக்கை நீ அழைத்துக்கொண்டு போய், நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றில் அவனை தகன பலியாகப் பலியிடு'' என்றார் (ஆதியாகமம் 22:2). 
ஆபிரகாம் விடியற்காலமே எழுந்து தன் மகனையும், நெருப்பு கலசத்தையும், கத்தியையும், விறகையும், வேலைக்காரன் ஒருவனையும், ஒரு கழுதையையும் அழைத்துக்கொண்டு பிரயாணப்பட்டு, மூன்றாம் நாள் கர்த்தர் குறித்த மலை வந்தவுடன் கழுதையையும், வேலைக்காரனையும் மலையின் அடிவாரத்தில் விட்டுவிட்டு, தன் மகனோடு பலியிட மலை ஏறினார். 
ஈசாக்கு அப்பாவிடம் ""அப்பா பலியிட ஆடு எங்கேப்பா?'' என்று வினவிய போதும் மனதை கடினப்படுத்திக்கொண்டு மலை உச்சிக்குப் போய் கற்களை வைத்து பலிபீடம் கட்டி, விறகுகளை அடுக்கி, ஈசாக்கை பலி பீடத்தின் மேல் கிடத்தி ""தெய்வமே... நீர் சொன்ன படியே என் அன்பு மகனை பலியிடுகிறேன். பலியிட்டு நெருப்பில் அவனை தகனம் செய்வேன்'' என்று சொல்லி ஈசாக்கின் கழுத்தை அறுக்க கையில் கத்தியுடன் ஓங்கினான். 
வானத்திலிருந்து ""கர்த்தரின் தூதர் ஆபிரகாமே... உன் பிள்ளையின் மேல் கத்தியைப் போடாதே. உன் ஒரே மகன். பாசத்துக்குரிய மகன், தன் ஒரே வாரிசு என்றும் பார்க்காமல் பலியிடத் துணிந்தாய்... அருகே ஆடு ஒன்று புதரில் சிக்கி உள்ளது. அதைக் கொண்டுவந்து பலியிடு...'' என்று சொல்லி ஈசாக்குக்கு பதில் ஆட்டைப் பலியிடும்படி கூறி, ஆபிரகாமின் பக்தியையும், கடவுளுக்கு கீழ்ப்படிதலையும், என்ன வந்தாலும் தெய்வமே முதல் என்பதைப் பாராட்டினார். "ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். மிக மிகக் கடுமையான சோதனையில் ஆபிரகாம் வெற்றி பெற்றார். நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறுவோம். இறையருளைப் பெறுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.