நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குரு வழிபட்ட சிவத் தலங்கள்!

காயாரோகண குரு: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் காயாரோகணீஸ்வரர் கோயிலில் தேவகுரு பிரகஸ்பதி சிவபெருமானை வணங்கி  தன் தோஷம் நீங்கி  தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

News image
Updated On :6 நவம்பர் 2020, 12:30 am

இரா. இரகுநாதன்


காயாரோகண குரு: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் காயாரோகணீஸ்வரர் கோயிலில் தேவகுரு பிரகஸ்பதி சிவபெருமானை வணங்கி  தன் தோஷம் நீங்கி  தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

தேவகுரு : திருவாரூர்- நாகை பாதையில் கீவளூருக்கு அருகில் உள்ள திருத்தேவூரில் அருள்புரியும் தேவபுரீஸ்வரரை தேவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வியாழனான குரு பகவான்,  இங்கு தவமிருந்து ஈசனை வழிபட்டு  "தேவகுரு'பதவியைப் பெற்றாராம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை சமேத மயூரநாதர் அருள்புரிகின்றனர். கைகாட்டும் வள்ளல், வாக்குக் காட்டும் வள்ளல், துறை காட்டும் வள்ளல், வழிகாட்டும் வள்ளல் என்று அழைக்கப்படும் இந்த இறைவனையும் குருபகவான் வழிபட்டு வரம் பெற்றார்.

குடந்தையில் உள்ள சோமேசர் திருக்கோயில். இறைவன் சோமேஸ்வரர், அம்பாள் சோமசுந்தரி. இவர்களை வழிபட்டு குருபகவான் பேறுகள் பெற்றார். இதுவும் குருதோஷ நிவர்த்தி தலமாகக் கருதப்படுகிறது.

குடந்தைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் சிவன்கோயிலுக்கு வெளியே ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனிக் கோயில் கொண்டு அருள் புரிகிறார். இவரை வழிபட்டாலும் ஞானம் மற்றும் கல்வியில் சிறந்த விளங்கலாம். 

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் அருள்புரியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பீடத்தில் 12 ராசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது எல்லா ராசிக்காரர்களுக்குமான குரு  பரிகாரத்தலம்.

யோக குரு : காஞ்சிபுரத்துக்கு வெகுஅருகில் இருக்கிறது இலம்பயம்கோட்டூர் என்னும் தலம். இங்கு அருள்புரியும் இறைவன் அரம்பேஸ்வரர், அம்பாள் கனக குசாம்பிகை. இந்தத் திருக்கோயிலில் யோக தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்பது நம்பிக்கை. 

வைணவத்தில் குருபரம்பரை என்பது திருமாலிடமிருந்து தொடங்கி வளரும். திருமாலை சரணடைந்தால் கிரக தோஷம்  எதுவும் அண்டாது என்பது நம்பிக்கையாக 
உள்ளது.  

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் அவதாரத் தலமாகும். நவ திருப்பதிகளுள் குருவுக்குரிய தலமாகும்.  ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்வார்கள். ஆனால்  இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரையே மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப்பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். 

தட்சிணாமூர்த்தி வழிபாட்டில்  நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபடுவார்கள். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும். 

கொண்டைக்கடலை நிவேதனம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.