முதல்தர யோக சாலிகள்...
ராகு-கேது பகவான்கள் அமானுஷ்ய விஷயங்களுக்கும் காரகர்களாகிறார்கள். ஜோதிடம், வேதம், வேதாந்தம் ஆகியவைகளின் தேர்ச்சியைக் கொடுப்பார்கள்.


ராகு-கேது பகவான்கள் அமானுஷ்ய விஷயங்களுக்கும் காரகர்களாகிறார்கள். ஜோதிடம், வேதம், வேதாந்தம் ஆகியவைகளின் தேர்ச்சியைக் கொடுப்பார்கள்.
நடிப்புத் துறையிலும் ராகுபகவான்: மனோபாவம் மிகவும் முக்கியம். கற்பனையும் தேவை. மக்களைச் சுண்டி இழுக்கிற ஈர்ப்பு சக்தியைப் பிரயோகிப்பதற்கும், மக்களின் பாராட்டைப் பெறுவதிலும் ராகு பகவானுக்குப் பங்குண்டு. புரட்சிகளைச் செய்கின்ற கிரகம் ராகு பகவானாவார்.
சூரிய பகவான் முதல் தர அரசுக் கிரகம் ஆவார். பலம் பெற்ற ராகு பகவான் அரசியலிலும் பிரதான இடங்களைப் பெற்றுத்தருவார். பலம் குறைந்த ராகு பகவான் அளவுக்கதிகமான மறதியைக் கொடுப்பார். வீண் விரோதம், சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆகியவைகளும் உண்டாகும். குலதெய்வ வழிபாடு குறைந்தவர்களுக்கு ராகு பகவானின் பலம் குறைந்திருக்கும். அதோடு மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலும் குறை இருக்கும் எந்தக் கிரகத்துடன் ராகு - கேது பகவான்கள் நெருக்கமாக இருந்தால், அந்தக் கிரகம் கொடுக்க வேண்டிய பலன்களை ராகு பகவான் தன் கையில் எடுத்துக் கொண்டு செய்வார் என்று சொல்லப்படுகிறது.
அஷ்டலட்சுமி யோகம் - மகாலட்சுமி யோகம்: ஆறாமிடத்தில் ராகு பகவான் இருக்க, குரு பகவானுக்கு கேந்திரத்தில் சந்திரபகவான் இருப்பதை அஷ்டலட்சுமி யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் ராகு பகவான் இருந்து குரு பகவானுக்கு சந்திர பகவான் கேந்திரம் பெறுவது முதல்தர யோகமாகக் கருதப்படுகிறது. சந்திர பகவானுக்கு (ராசி) ஆறாமிடத்தில் ராகு பகவான் அமர்ந்து குருபகவானுக்கு சந்திர பகவான் கேந்திரம் பெறுவது இரண்டாம் நிலையாகச் சொல்லப்படுகிறது.
முதல் தர யோகசாலிகள்: முப்பது வயதிலிருந்து முப்பத்து மூன்று வயதிற்குள் திட்டமிட்ட உழைப்பு, எதிர்பாராத பண வரவுகளால் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
இரண்டாம் நிலை யோகசாலிகள்: கடுமையாக உழைக்கின்றனர், சம்பாதிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு பணக்கார யோகமானது ஐம்பது வயதுக்கு மேல்தான் உண்டாகிறது அல்லது சந்ததிகளால் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...