நவகிரகங்களில் ராகுவும்-கேதுவும் நிழல் கிரகங்கள் என்றழைக்கப்படுகின்றன. மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்திற்கு முன்னர் ராகு - கேது இல்லை. வாரத்தின் ஏழு நாள்களும் மற்ற கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ராகு - கேதுவுக்கென ஒரு நாள் ஒதுக்க முடியாததால், ஒவ்வொரு நாளும் அந்த இரு கிரகங்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க சிவபெருமான் உத்தரவிட்டார்.
அந்த வகையில் ராகுவுக்கான நேரம் "ராகு காலம்' என்றும், கேதுவுக்கான நேரம் "எமகண்டம்' என்றும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராகு காலம்
தினமும் ஒன்றரை மணி நேர ராகு காலத்தை நினைவில் வைத்துக் கொள்ள...
"தி ச வெ பு வி செ ஞா' - என்ற எழுத்துக்களை மனப்பாடம் செய்யலாம்.
ராகு காலம் திங்கள்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவதால் கிழமைகளின் முதல் எழுத்தை மேற்கண்ட வரிசையில் நினைவில் வைத்துக் கொண்டால் காலண்டரைத் தேட வேண்டியதில்லை.
திங்கள்கிழமை: காலை 7.30 மணி முதல் 9.00 வரை
சனிக்கிழமை: காலை 09.00 மணி முதல் 10.30 வரை
வெள்ளிக்கிழமை: காலை 10.30 மணி முதல் 12.00 வரை
புதன்கிழமை: மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
வியாழக்கிழமை: பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 வரை
செவ்வாய்க்கிழமை: பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை
ஞாயிற்றுக்கிழமை: மாலை 04.30 மணி முதல் 06.00 வரை
எமகண்ட நேரம்
குரு பகவானின் புதல்வன் எமன் என்பதால், எமகண்ட நேரத்தை முதலில் வியாழக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும். அப்படியே நாள்களை பின்னோக்கிய வரிசையில் வியாழன், புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என நினைவில் வைத்துக் கொண்டால், நேரத்தையும் வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
ராகு காலம் மட்டுமே காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. எம கண்டம் காலை 6.00 மணிக்குத் தொடங்குவதால் தினமும் ஒன்றரை மணி நேர எம கண்டத்தை நினைவில் வைத்துக் கொள்ள...
"வி பு செ தி ஞா ச வெ'
-என்ற எழுத்துக்களை மனப்பாடம் செய்யலாம்.
வியாழக்கிழமை: காலை 6.00 மணி முதல் 7.30 வரை
புதன்கிழமை: காலை 07.30 மணி முதல் 09.00 வரை
செவ்வாய்க்கிழமை: காலை 09.00 மணி முதல் 10.30 வரை
திங்கள்கிழமை: காலை 10.30 மணி முதல் 12.00 வரை
ஞாயிற்றுக்கிழமை: மதியம் 12.00 மணி முதல் 01.30 வரை
சனிக்கிழமை: பிற்பகல் 01.30 மணி முதல் 03.00 வரை
வெள்ளிக்கிழமை: பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 வரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


