ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எமனுக்கு அஞ்சாத திடமான வாழ்வருளும் தெய்வம்!

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சா நகரம்.

News image
Updated On :25 ஜூன் 2021, 11:29 am


மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சா நகரம். இக்கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு துங்க பாலஸ்தானாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. சோழர் காலத் திருப்பணிகள் கண்ட திருத்தலம்.

ஆலயச் சிறப்பு: மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடையது இவ்வாலயம். "காத்ர' என்பதற்கேற்ப இங்குள்ள இறைவன் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயர் நீக்கி, எமனுக்கு அஞ்சாத திடமான வாழ்வருளி, காத்து ரட்சிப்பதால் "கஞ்சா நகர காத்ர சுந்தரேஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. 

அம்பிகை ஸ்ரீ துங்க பாலஸ்தானாம்பிகை என்கிற அபூர்வ திருநாமத்துடன் மிகவும் அழகிய கோலத்துடன் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்கிறாள். வில்வம், அத்தி என இரு தல விருட்சங்கள் ஆலயத்தில் காணப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தக்குளமானது "அலகாபாத் திரிவேணி சங்கம தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பு சந்நிதிகள்: இவ்வாலயத்திலுள்ள இரண்டு சந்நிதிகளில் ஒன்று நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் சிற்பமான ஸ்ரீ நடராஜ மூர்த்தி சந்நிதி, மற்றொன்று சீர்காழியைப் போலவே இங்கும் சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சட்டநாதர் சந்நிதி.

விழாக்கள்: பிரதோஷம், நவராத்திரி, அன்னாபிஷேகம், மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

பரிகாரத் தலம்: கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய கோயில் இது. கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது பிரதோஷ நாளிலோ இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்கிறார்கள். மேலும், மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் அம்பிகைக்கு சுமங்கலி பூஜை செய்வதன் மூலமும், புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதன் மூலமும் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. 

நான்கு குடமுழுக்குகள்: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், இவ்வூரை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ். முன்னிலையில் கடைசி நான்கு குடமுழுக்குகள் சிறப்பாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. 

பேருந்து வசதி: மயிலாடுதுறையிலிருந்து பேருந்து தடம் எண்: 21ஏ - கஞ்சா நகரம் செல்கிறது. தொடர்புக்கு: சம்பந்த குருக்கள்: 9487443351.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.