மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பரிவர்த்தன ராஜயோகம்!

இரண்டு கிரகங்கள் தங்களுடைய ராசிகளில் மாறி அமர்ந்திருந்தால், அதனை "பரிவர்த்தனை' என்கிறோம்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 11:40 am

தினமணி


இரண்டு கிரகங்கள் தங்களுடைய ராசிகளில் மாறி அமர்ந்திருந்தால், அதனை "பரிவர்த்தனை' என்கிறோம். உதாரணமாக, சூரிய பகவானின் வீட்டில் குரு பகவானும், குரு பகவானின் வீட்டில் சூரிய பகவானும் அமர்ந்திருந்தால் "பரிவர்த்தனை' என்று கூறுகிறோம். 

இத்தகைய நிலையில் இந்த கிரகங்கள் தாங்கள் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பலத்தையும் தங்களுடையதாக்கிக்கொண்டு இரட்டிப்பு பலத்துடன் செயல்படுவார்கள். மேற்கூறிய  உதாரணத்தில், சூரிய பகவான் குரு பகவானின் ஆதிபத்ய பலத்தையும், குரு பகவான் சூரிய பகவானின் ஆதிபத்ய பலத்தையும் தங்களுடையதாக்கிக் கொண்டு செயலாற்றுவார்கள்.

லக்ன சுப கிரகங்களுக்கு இடையே "பரிவர்த்தனை‘ உண்டானால், அது அந்த ஜாதகத்திற்கு மிகவும் நன்மையாக அமையும். இந்த கிரகங்களின் தசா புக்தி அந்தரங்களில் இந்த "பரிவர்த்தனை யோகம்' வேலை செய்யும். நீச்சமான வீட்டுக்கு அதிபதியான கிரகமும் நீச்சமடைந்து இருந்தால், அதை "நீச்ச பரிவர்த்தனை' என்கிறோம். அந்த கிரகங்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிவிடும். இதனை "பரிவர்த்தன ராஜயோகம்' என்றும் கூறுவார்கள்.

அனைத்து கிரகங்களும் ஏதோ ஒரு நட்சத்திரத்தின் மீது அமர்ந்திருப்பார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.  அத்தகைய கிரகம், அந்த கிரகத்தின் சாரத்தில் அமர்ந்திருக்கிறது என்றும், இதை "கிரகச்சாரம்' என்றும் அழைப்பர்.

உதாரணத்திற்கு, சூரிய பகவான் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திர சாரத்தில் சஞ்சரித்தாலோ, குரு பகவான், சூரிய பகவானின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலோ இதை "நட்சத்திர பரிவர்த்தனை‘ அல்லது "சார பரிவர்த்தனை‘ அல்லது "சூட்சும பரிவர்த்தனை' என்று அழைக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.