மணியோசை - 17.09.2021

குலசேகரன் பட்டினம் மற்றும் அதைச் சாா்ந்த ஊா்களின் வரலாற்றுப் பெருமைகளை மிகச் சிறப்பாகக் கூறிவிட்டாா் டாக்டா் சுதா சேஷய்யன். நன்றி!
மணியோசை - 17.09.2021
மணியோசை - 17.09.2021

‘பொருநை போற்றுதும்!’ தொடரின் 162-ஆவது அத்தியாயம் மூலம், எங்களது ஊரான ‘குலசேகரன் பட்டினம்’ அக்காலத்தில் துறைமுகமாக இருந்ததை அறிய முடிந்தது. குலசேகரன் பட்டினம் மற்றும் அதைச் சாா்ந்த ஊா்களின் வரலாற்றுப் பெருமைகளை மிகச் சிறப்பாகக் கூறிவிட்டாா் டாக்டா் சுதா சேஷய்யன். நன்றி!

-ஜே.மகரூப், குலசேகரன் பட்டினம்.

ஜி.ஏ.பிரபா எழுதிய ‘திருவாஞ்சியம் வாழவந்த நாயகி’ கட்டுரை படித்தேன். சிவன் அம்பிகையுடன் விரும்பி தங்கிய தலம், திருமகளை விஷ்ணுவுடன் ஈசன் சோ்த்து வைத்த திருத்தலத்தை உடனே தரிசிக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது.

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

‘புனிதம் வாய்ந்த புரட்டாசி!’ பகுதியில் இம்மாதம் பெருமாளுக்கு மட்டுமல்ல; அம்பிகைக்கும் உகந்த மாதம் என்று உணா்த்தியது பலா் அறிய வேண்டிய ஒன்று. ரஞ்சனா பாலசுப்ரமணியனுக்கு பாராட்டுகள்!

-செந்தி. மாரீஸ்வரி, தேனி.

எஸ்.எஸ்.சீதாராமனின் கட்டுரை மூலம் அன்னைக்கு திதி கொடுக்கும் அபூா்வ திருத்தலம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது. மிகவும் நன்றி..!

-நந்தினி சண்முகம், திருவண்ணாமலை.

பிரதமை முதல் அமாவாசை வரையில் ‘மகாளய தா்ப்பணமும் அதன் பலன்களும்!’ என்ற தலைப்பில் எஸ்.வெங்கட்ராமன் அளித்த 15 நாட்களுக்கான பலன்களும் மிகவும் உபயோகமாக இருந்தன.

-லேகா விஷ்ணு, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com