ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பாலாரிஷ்ட தோஷம்!

ஜோதிடத்தில் சுபகிரகங்கள் என்ற வரிசையில் குரு, சுக்கிர பகவான்கள் முதன்மை நிலையில் நிற்கின்றனர். ஒருவர் சுகபோக  வாழ்க்கையில் நன்றாக வாழ்கிறார் என்றால் இந்த இரு கிரகங்கள் முக்கிய பங்கேற்கின்றன. 

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

தினமணி


ஜோதிடத்தில் சுபகிரகங்கள் என்ற வரிசையில் குரு, சுக்கிர பகவான்கள் முதன்மை நிலையில் நிற்கின்றனர். ஒருவர் சுகபோக  வாழ்க்கையில் நன்றாக வாழ்கிறார் என்றால் இந்த இரு கிரகங்கள் முக்கிய பங்கேற்கின்றன. 

ஒரு ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்தில் செவ்வாய், ராகு, கேது பகவான்கள் லக்னத்திற்கோ ராசிக்கோ சந்திர பகவான் 4, 7, 8 }ஆம் இடங்களில் நின்று விட்டால் "பாலாரிஷ்ட தோஷம்' (குழந்தையிலேயே கண்டம் என்பதற்கு இந்தப் பெயர்  கொடுக்கப்பட்டுள்ளது) இருப்பதாகக் கூறுவார்கள்.

பாலாரிஷ்ட தோஷம் என்றால் பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே கண்டங்கள் ஏற்படுவது. ஜாதக அலங்கார நூல் இப்படி குழந்தை நான்கு ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் தாய் செய்த முன்வினையாலும், எட்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் தகப்பன் செய்த முன்வினையாலும், எட்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் இறந்து விட்டால் குழந்தை செய்த முன் வினையாலும் பாலாரிஷ்ட தோஷத்தால் இறந்து விட்டதாகக் கருத வேண்டும். 

இதுதான் பாலாரிஷ்ட தோஷ விதி என்றாலும், முதலில் சுப கிரகங்கள் என்று சொல்லப்பட்ட குருபகவானும், சுக்கிர பகவானும் கேந்திரம் என்று சொல்லப்படும் நான்காம் இடத்தில் நின்று விட்டால்  பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் தோஷம் உடைபடுகிறது. ஆகவே, குழந்தைக்கு ஆயுள் நிரம்ப உண்டு என்று பொருள்படும். இதுபோலவே ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு கிரகங்களால் கருத்து மாறுபடுகிறது.

பொதுவாக பாலாரிஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு வருடாவருடம் குழந்தைகள் பிறந்த திதி, நட்சத்திரம் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வது வழக்கமான பரிகாரமாக உள்ளது. சில அந்தணர்கள் குழந்தையின் ஏழு வயது முடிவதற்குள் அதாவது கர்ப்பத்திலிருந்து எட்டு வயது முடிவதற்குள் பூணூல் சடங்கு செய்து காயத்ரி ஜெபம் செய்வதற்கான தகுதியை உண்டாக்கி விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.