நான்கும்... ஏழும்...
கன்னி ராகுவுக்கு சிறப்பான பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. இவர் சந்திர சாரம் பெற்றால் மிக பலம் அடைவார்.


எண் 4 - அதிபதி ராகு பகவான்
சக்திகள்
1. விசாரித்து ஆராய்ந்து அறியும் சக்தி
2. மனோவசியம்
3. ஜோதிட அறிவு
4. வேதாந்த சாஸ்திர அறிவு
5. சாமர்த்தியம்
6. காரியசித்தி
7. விசேஷ ஆபரணச் சேர்க்கை
8. செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும்
9. திடீர் அதிர்ஷ்டம்
10. தெய்வ அருள் கிடைக்கும்
11. எல்லோராலும் வணங்கப்படும் பதவி
12. மருத்துவச் சாதனைகள் புரிதல்
கன்னி ராகுவுக்கு சிறப்பான பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. இவர் சந்திர சாரம் பெற்றால் மிக பலம் அடைவார். சனி, புத பகவான்களுடன் இணையும் போது சிறப்பான பலன்களே கொடுப்பார். சூரிய, செவ்வாய் பகவான்களின் சேர்க்கை நல்லதல்ல.
ராகு, சுக்கிர இணைவு நீச்ச சுக்கிரனாவதால், கீழ்த்தரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். எப்படியும் வாழலாம் என்று வாழ்வார்கள். ராகு இங்கு வர்கோத்தமம் பெற்று மீன குருவால் பார்க்கப்பட்டால் கெடு பலன்களே நடக்கும்.
கேது பகவான் இங்கு செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) தவிர மற்ற சாரங்களில் இருப்பது நல்லது. இங்கு சூரியன், கேது சேர்க்கை ஆத்ம பலத்தையும், ஆன்மிகத்தில் நாட்டத்தையும் கொடுக்கும்.
சனி, புதன், கேது, செவ்வாய் சாரம் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமம் பெற்றால் அலித் தன்மை ஏற்படும்.
எண் 7 - அதிபதி கேது பகவான்
சக்திகள்
1. யோக மந்திரசக்தி
2. உயர்ந்த லட்சியம்
3. தெய்வ அருள் சித்தித்தல்
4. ஜனவசியம்
5. ஆன்ம வளர்ச்சி
6. உலகாயத அறிவு
7. புரட்சி உண்டுபண்ணும் உலகப்
பிரசித்தி
8. மிதமிஞ்சின தீரம்
9. சாஸ்திரம், கலை ஞானங்களில் தேர்ச்சி
10. சீறியெழும் ஐம்புலன்களை அடக்கி ஆளும் சக்தி
11. அப்பியாசம் புரிய இரவு நேரத்தில் மனோசக்தி அதிகரித்தல்
12. புத்தியை கூர்மைப்படுத்தி, பேச்சிலே நயமும், தந்திரமும், மிருதுத்
தன்மையும் புலப்படச் செய்தல்.
(மூன்று கிரகங்களும் அலித் தன்மை கிரகங்கள் ஆவதாலும், எட்டாமிடம் பிறப்புறுப்பை குறிப்பதாலும், எட்டுக்குரிய செவ்வாய் சாரம் பெற்று நின்றால் இந்நிலை ஏற்படும்).
குரு பார்வையும் இங்கு முரணான பலனையே கொடுக்கும். சந்திரன், கேது, புதன் சேர்க்கை சூதாட்டம், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் ஈடுபடச் செய்யும். சிலருக்கு இதில் அதிர்ஷ்டமும்
இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...