இந்த ராசிக்காரர்கள் கடன்களை அடைப்பார்கள்: வாரப்பலன்கள்

ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியிருக்கும்  வாரப் பலன்கள் - 25.11.2022 முதல் 1.12.2022 வரை
வாரப்பலன்கள்
வாரப்பலன்கள்
Published on
Updated on
2 min read

வாரப் பலன்கள்- 25.11.2022 முதல் 1.12.2022 வரை

மேஷம் 
வருமானம் சீராக இருக்கும். தொழிலில் கவனமும் பொறுமையும் அவசியம். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மனதுக்கு இனிய பயணம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக அமையும்.  வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக ஈடுபடுவார்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் கைவந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் கிடைக்காது. பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - 25

ரிஷபம்
பெரியோரின் ஆலோசனையின்படி, மாற்றமான வாய்ப்பு ஏற்படும்.  வீடு, வாகனங்கள் வாங்கும் சிந்தனை இருக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை விரைவாக முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு பண வரவு உண்டாகும். விவசாயிகள் உழைத்து மகசூலைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் வளர்ச்சியை அடைவார்கள். பெண்கள் சேமிக்கத் தொடங்குவார்கள்.  மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம் - 26,27

மிதுனம்
திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடித்துவிடுவீர்கள். மனதில் புதிய தெளிவு உண்டாகும்.  உடல் உபாதைகள் நீங்கும்.  உடன் இருப்போரை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு பாசன வசதிகள் மேம்படும். அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெண்களுக்கு கணவர் வழி உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.  மாணவர்கள் அனைவரையும் அனுசரித்து நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - 28,29

கடகம்
தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். தந்தை வழியில் ஆதரவான நிலை உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். உடல் நலப் பிரச்னைக்குத் தீர்வு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி, விற்பனையைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் சேவையில் ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் மனநிலையை உணர்ந்து செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம்-30, 1.

சிம்மம்
பொருளாதார நிலை மேம்படும், பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.  வியாபாரிகள் உழைத்து முன்னேறுவார்கள். விவசாயிகளுக்கு புழு பூச்சிகளின் பாதிப்பு இருக்காது. அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். கலைத்துறையினருக்கு வருவாய் கிடைக்கும்.  பெண்கள் குடும்பத்தினரால் மனநிறைவைப் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனை கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி
செய்யும் காரியங்களால் மன உற்சாகம் பெறுவீர்கள்.  பூர்விக சொத்துகளில் வருவாய் உயரும். நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளில் வியாபாரம் செய்து லாபம் பெறுவார்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.
சந்திராஷ்டமம் - இல்லை

துலாம்
குடும்பத்தில் அமைதி நிலவும். விவாதங்களைத் தவிர்க்கவும். வருவாய் சுமாராக இருந்தாலும் கடன் பிரச்னை இருக்காது. வசிக்கும் வீட்டை மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகளிலிருந்து விலகி நிற்கவும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும்.  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் பிரச்னை ஏற்படும். கலைத்துறையினர் பிறரால் நன்மை அடைவார்கள். பெண்கள் கஷ்டத்திலிருந்து விடுபடுவார்கள்.  மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை

விருச்சிகம்
தொழிலில் தொய்வு ஏற்பட்டாலும், சமாளிப்பீர்கள். சுபகாரியங்கள் நடைபெறும். புதிய நட்பு கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் அனுசரித்து நடக்கவும். கலைத்துறையினர்  புதிய ஒப்பந்தங்களில் கவனத்துடன் இருக்கவும் . பெண்கள் தைரியத்துடன் கஷ்டங்களை எதிர்கொள்வார்கள்.  மாணவர்களுக்கு பழைய முயற்சிகள் கைகொடுக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை

தனுசு
தயக்க உணர்வை குறைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தள்ளிப் போகும். வியாபாரிகள் செலவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். விவசாயிகளின் பிரச்னைகள் பளிச்சிடும். அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவார்கள். கலைத்துறையினர் மகிழ்ச்சியாகத் தங்களது கடமைகளில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.

மகரம்
குடும்பத்தில் எந்தக் குறையும் உண்டாகாது.  தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.  குடும்பத்தில் விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள்.  எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகக் கெடுபிடிகளைச் சமாளிப்பார்கள்.  வியாபாரிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பொறுப்பாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு ஆதரவு கூடும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.

கும்பம்
தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உந்து சக்தியாக அமையும்.  உடனிருப்போருக்கு ஆதரவாக இருப்பீர்கள். கடன் திரும்ப வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.  வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடவும். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் புதிய வேகத்துடன் இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை

மீனம்
எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.  எதிரிகளும் உடன் வந்து சேருவார்கள்.  பொறாமைகள் மறையும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். 
உத்தியோகஸ்தர்களுக்கு அவநம்பிக்கை விலகும். வியாபாரிகள் கடன்களை அடைப்பீர்கள்.  விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்தியால் ஆனந்தம் அடைவார்கள். கலைத்துறையினர் புதிய மைல்கல்லை எட்டுவார்கள். பெண்கள் குழந்தைகள் வழியால் பூரிப்படைவார்கள். மாணவர்கள் கடும் உழைப்பால்  எதையும் சாதிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com