கருணையும், சாந்தமும் சேர்ந்தவர் சிவன். ஆனால் அவரே ஒரு சமயம் கடும்கோபத்துக்கு ஆள்பட நேரிட்டது. தன் தவ வலிமையால் ஈசனை நோக்கித் தவமிருந்து மூவுலகையும் ஆளும் வரம் பெற்றான் தக்கன். வரம் பெற்ற மமதையில்தான் மேற்கொண்ட யாகத்துக்கு அவிர்பாகம் பெற சிவனை அழைக்கவில்லை.
தன்னை மதிக்காது தலைகனத்தோடு திரிந்த தக்கனுக்குத் தக்கப் பாடம் புகட்ட எண்ணினார் ஈசன்.
சீற்றம்கொண்டு எழுந்து, தன் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து அகோர அம்சமான வீரபத்திரரை அவதரிக்கச் செய்தார். அதேசமயம் தன்னையும், தன் கணவரையும் மரியாதைக் குறைவாக நடத்திய தன் தந்தை தக்கன் மீது கோபம்கொண்ட அன்னை பார்வதி (தாட்சாயனி) தனது அம்சமாகப் பத்ரகாளியைத் தோற்றுவித்தாள்.
இறைவனின்ஆணைப்படி, காளி தேவி, சிவ பூத கணங்களுடன் சென்ற அகோர வீரபத்திரர் தட்சனின் வேள்வியை அழித்து, அதில் கலந்துகொண்ட தேவர்களையும் தண்டித்து, தட்சன் தலையைக் கொய்தார்.
எனினும், தக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் ஆனதால் தேவர்கள் வேண்டியபடி, யாகத் தீயில் கருகிய தக்கனின் தலைக்குப் பதிலாக ஓர் ஆட்டுக்கிடாய் தலையைப் பொருத்தி அவனை உயிர்ப்பித்தார். இது புராணம் கூறும் தகவலாகும். ஆட்டுத் தலையுடன் அவன் " மேமே' என்று கத்திக் கூறிய தொனியே (ஒலி) வேதத்தின் கண் என்று போற்றப்படும்.
ஸ்ரீருத்ரத்தின் ஒரு பகுதியான சமகம் ஆயிற்று என்பர். தன்னிடமிருந்தே தன்னைப் பிறப்பித்துக் கொண்டு தக்கனின் ஆணவத்தை ஒடுக்கி, அறத்தை நிலைநாட்டச் செய்த சிவனின் இந்தச் செய்கை "தட்சயக்ஞபங்கம்' எனப்படும்.
ஈசனின் 64 சிவ வடிவங்களில் ஒன்றாக சிவாம்சமாக அகோர வீரபத்திரர் வழிபடப்படுகிறார். மேலும், கயிலையில் சிவ குடும்பங்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.
வீரபத்திரரின் பல வடிவங்களைப் பற்றி இலக்கியத்தில் இதிகாசங்களில், சிற்பக் கலையில், ஓவியக் கலையில், கல்வெட்டுகளில், சமயப் பார்வையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
பல புராதன சிவன் கோயில்களில் தனிச் சந்நிதி கொண்டும், மூல மூர்த்தியாகவும் வழிபடப்படுகிறார்.
அட்டவீராட்டத் தலங்களில் ஒன்றான திருப்பறியலூரை குறிப்பிட்டுச்சொல்லலாம். இதைத் தவிர, அவருக்கு தனி கோயில்களும்அநேக இடங்களில் உண்டு. அதில் ஒன்றுதான் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலம் பேரூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீஅகோர வீரபத்திரர் கோயிலாகும். திருவூரல் எனப்படும் தக்கோலம் திருத்தலமும் புராண வரலாற்றுடன் தொடர்புபடுத்தியே பேசப்படுகிறது. தக்கன் தலையைக் கொய்த இடம் என்று கூறப்படுவது உண்டு.
தக்கன் தனக்கு அழிவுவரும் நிலைமையைக் கண்டு ஓலமிட்டதால் (தக்கன் + ஓலம் = தக்கோலம்) தக்கோலம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்றாம். இத்தலத்துக்கு அருகில் ஓடும் ஸ்ரீவிருத்தஷீர நதிக்கரையில் (கொசஸ்தலை ஆறு) தவமிருந்து இறைவன் அருளால் பாபவி மோசனம் அடைந்ததாகவும் வரலாறு.
கோயில் அமைப்பு: இத்தலத்தில் உள்ள கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலநாதீஸ்வரர் கோயிலுக்கு மேற்கு முகமாக சந்நிதி தெருவிலேயே கோயில் கொண்டு அருளுகின்றார் ஸ்ரீஅகோர வீரபத்திரர். மூலவர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் கருணைப் பொங்கும் வதனத்துடன் இடப்புறம் கையில் வில்லும், கேடயமும், வலப்புறம் அம்பும், வாளும் கொண்டு கழுத்தில் ருத்ராட்ச மாலை அலங்கரிக்க, அருகில் ஆட்டுத் தலையுடன் தக்கன் பணிந்து வணங்கியபடி நிற்க, காட்சி தரும் அதிஅற்புதமான கோலம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இந்தக்கோயிலை தக்கோலம் வகையறா ஜங்கம் குல மரபினர் தொன்று தொட்டு பரம்பரை வழியில் குல தெய்வமாக பூஜித்தும், பராமரித்தும் வருகின்றனர்.
வழிபாட்டுபலன்: இவரை வழிபட்டால் குரோதம், உன் மத்தம், தீமைகள் போன்றவை விலகும். ஆன்மா தூய்மை பெறும்.
திருப்பணி: பரிவாரத் தேவதைகள், கோஷ்ட தேவதைகளுடன் கூடிய இவ்வாலயத்தில் 150 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் செப். 9}இல் நடத்தப்படுகிறது.
புனரமைப்புப் பணி முடிந்து, புதியதாய் எழில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு - 8525009123, 9677961889.
-எஸ். வெங்கட்ராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


