12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 6 -  12 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 6 -  12 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதுக்கினிய பயணம் செய்ய நேரிடும். எதிரிகள் தானாக விலகிவிடுவார்கள். குழந்தைகள் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்பாக வியாபாரத்தை மேற்கொள்வார்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்புகளை ஏற்பார்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பம் உண்டாகும்.

பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். மாணவர்களுக்குப் பிறர் பக்கபலமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். கடன் வாங்கும் நிலை இருக்காது. எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் நற்பெயர் எடுப்பர். வியாபாரிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் வருவாயைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் வீண்விவாதங்களைத் தவிர்ப்பார்கள். கலைத் துறையினர் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திப்பார்கள்.

பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் நண்பர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலர் புதிய நிலங்களை வாங்குவார்கள். கெüரவமும் அந்தஸ்தும் உயரும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் விலகும். வியாபாரிகள் புதிய முயற்சி
களைத் துணிவுடன் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவார்கள். கலைத் துறையினருக்கு பண வரவு இருக்கும். பெண்கள் சேமிக்கத் தொடங்குவீர்கள்.   மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். இல்லத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குறைந்த லாபத்தில் தொழிலை நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு வேலைப்பளு குறையும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணங்களைச் சேர்ப்பார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சிந்தித்து காரியமாற்றுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவார்கள். வியாபாரிகள் கடைகளை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களைப் பகைத்துகொள்ள வேண்டாம். கலைத் துறையினருக்கு விருதுகள் கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்கள் வெற்றிப் பாதையில் பயணிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பிறரிடம் விட்டுக் கொடுத்து பழகுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். குழப்பங்களைத் தவிர்க்க, தனிமையை நாடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தடைகளைத் தாண்டி பொருள்களை விற்பனை செய்வார்கள். விவசாயிகள் கால்நடைகளின் மீது தனிக் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உடல் ஆரோக்கியம் சிறக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் சற்று அசிரத்தையாக இருப்பார்கள். தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரிடம் இன்முகத்துடன் பழகுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் ஏற்படாது. வியாபாரிகள் புதிய லாபத்தை எட்டுவார்கள். 

விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளையை நிறைவேற்றுவார்கள். கலைத் துறையினரின் கெüரவம் உயரும்.

பெண்கள் புத்துணர்வோடு இருப்பார்கள். மாணவர்களின் திறமை வெளிப்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொறுப்புடன் பணியாற்றி நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பெற்றோரும் ஆதரவாக இருப்பார்கள். உயர்ந்தோரின் நட்பால் அந்தஸ்து உயரும். சிலருக்கு வருமானம் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரிகள் செலவுகளைக் குறைப்பார்கள். விவசாயிகள் புதிய கிணறுகளை வெட்டுவார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளை வெல்வார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.

பெண்கள் கணவரின் குடும்பத்தை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் பாராட்டையும் பரிசையும் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - அக். 6, 7.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நண்பர்களின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்த்தவர்களும் நட்பு கொள்வார்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். அரசு கெடுபிடிகளும் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைக் குறைப்பீர்கள். வியாபாரிகள் வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் கடினமாக உழைப்பார்கள். 

அரசியல்வாதிகளின் மதிப்பு உயரும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். 

பெண்கள் உறவினர்களின் மதிப்பைப் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களின் சொல்படி நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - அக். 8, 9.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழில் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வை காண்பீர்கள். அநாவசிய வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுவீர்கள். பெற்றோரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் சக வியாபாரிகளிடையே நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சிறக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். மாணவர்களின் தனித்திறமை வெளிப்படும்.

சந்திராஷ்டமம் - அக். 10, 11, 12.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கவனமாகப் பணியாற்றுவீர்கள். வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளிடையே இருந்த போட்டியும் பொறாமையும் விலகும்.

விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் பிறருக்கு உதவி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும்.

பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கும் மதிப்பும் உயரும். மாணவர்களுக்கு சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

காலம் தாழ்த்தாமல் முடிவு எடுப்பீர்கள். பங்குச் சந்தையில் வருமானம் உயரும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரிகள் கடுமையாகப் போராடி போட்டிகளை சமாளிப்பீர்கள். விவசாயிகள் நிலப் பிரச்னைகளில் நல்ல முடிவைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் பல விவகாரங்களில் முக்கிய பங்காற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com