தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தஞ்சை கோயிலின் சிறப்பு

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இது 18 அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாகும்.

News image
Updated On :12 ஜனவரி 2024, 12:50 pm


தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இது 18 அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாகும்.

தமிழின் உயிர் எழுத்துகள் 12 என்பதைக் குறிக்கும் வகையில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடியாகவும்,  மெய் எழுத்துகள் 18 என்பதைக் குறிக்கும் வகையில் பீடத்தின் உயரம் 18 அடியாகவும், உயர்மெய் எழுத்துகள் 216 என்பதைக் குறிக்கும் வகையில் கோபுரத்தின் உயரம் 216 அடியாகவும் உள்ளன. மொத்த எழுத்துகள் 247 என்பதை உணர்த்துகிறது.

ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் 236 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.  கோயிலைக் கட்டிய சோழப் பேரரசரான ராஜராஜன் இதில் எங்குமே தனது பெயரை பொறித்துகொள்ளவில்லை.  அதேநேரம் தலைமைச் சிற்பியான குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சனின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மூலவர் சிவ லிங்கத்துக்கு அடியில் மிகப் பெரிய அளவில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இதனால் மூலவர் மண்டபத்தில் வெயில் காலத்தில் குளிர்ச்சியான தன்மையும், குளிர்காலத்தில் வெப்பமான தன்மையும் 
பக்தர்களால் இன்றளவும் உணரப்படுகிறது.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.