நரசிம்மர்
நரசிம்ம அவதாரக் காலத்தில் பெரிய வனப் பகுதியில், ஜாபாலி என்னும் மகரிஷி கடும் தவமிருந்தபோது, அவர் முன் திருமால் தோன்றி, "வேண்டும் வரம் கேள்'' என்றார்.
"உனது அவதாரங்களில் சிறப்பானது நரசிம்மமே. பிரகலாதனுக்காக நீ காட்சி தரும்போது முக்கண்ணனாக காட்சி தந்த கோலத்தில் தரிசிக்க வேண்டும்'' என்றார் ஜாபாலி மகரிஷி.
ஸ்ரீ நரசிம்மர் இரண்யனை வதம் செய்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் தன் குருதி தோய்ந்த கையைக் கழுவியபோது, ஏரி தண்ணீர் முழுவதும் சிவந்து போனது. நிலமும் சிவந்து போன செங்குன்றமானது. கோபத்துடன் பார்க்க பரந்துபட்ட கானகத்தின் தொலைவில் உள்ள வனப் பகுதி கருகியது.
அதே சினத்துடன் குன்றுக்குள் இருந்த குடைவரைக்குள் திரிநேத்திரம் எனப்படும் மூன்றாவது கண்ணுடன் பிரகலாதன் தரிசிக்க அமர்ந்தார். அதே கோலத்தில் வேண்டியபடி மூன்று கண்களுடன் (த்ரிநேத்திர தரிசனம்) ஜாபாலி மஹரிஷிக்கு குன்றின் குகையில் காட்சி கொடுத்தார்.
மூலவர் நரசிம்மர் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்குள் சுமார் எட்டு அடி அளவில் வீற்றிருந்த திருக்கோலத்தில் வலதுகை அபயமாகவும் இடதுகை தொடையின் மேல் இருக்க, வலது காலை மடித்து, இடது கால் தொங்க கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் எழுந்தருளியுள்ளார். மேலிரு கரங்களில் சங்கு, சக்கரமும், வலதுகரம் அபயகரமாகவும், இடதுகரம் மடிமீது வைத்தபடியும் அருள்கிறார்.
மூலவருக்கு மூன்று கண்கள் இருப்பது அதிசயமாகும். மூலவர் மலையே திருமேனியாக உள்ளதால் இறைவனை வலம்வருவது என்றால், சிறிய குன்றினைச் சேர்த்துதான் பிரதட்சணம் வர வேண்டும். மூலவர் சாளிக்ராம மாலை சகஸ்ரநாம மாலை லட்சுமி மாலைகளுடனும் திருமார்பில் மஹாலட்சுமியுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
மூலவருக்கு "பாடலாத்ரி நரசிம்மர்' என்பது பெயர் "பாடலம்' என்றால் "சிவப்பு' என்றும், "அத்ரி' என்பதற்கு "மலை' என்றும் பொருள். சிவந்த கண்களுடன் கோபமாக, காட்சியளித்ததால், இந்தப் பெயர் வந்தது. உற்சவர்
பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரணவக்கோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்
மூலவருக்கு முன்னால் ஸ்ரீபால நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் அகோபிலவல்லித் தாயாரும் இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. மூலவர் உக்ரநரசிம்மராக இருப்பதால் தனியாக லட்சுமி நரசிம்மரும் எழுந்தருளியிருக்கிறார். தவிர பன்னிரு ஆழ்வார்களும் அருளுகின்றனர்.
பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் அமைப்பில் தரங்கு போதிகை அமைப்புடைய தூண்களுடன் உள்ளன. கருவறைக்கு அருகிலுள்ள தூண் கல்வெட்டு முற்காலச்சோழர் கல்வெட்டாகும். நரசிம்மவர்ம பல்லவன் காலத்து குடைவரையாக இருக்கலாம் என்பதால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாகும் .
மூலவரை வலம் வர வேண்டும் என்றால் மலைக்குன்றை சுற்றியே வலம்வர படிக்கட்டுகள் அமைந்துள்ளன. குன்றின் மீது சுதையால் பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனியே விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
தலவிருட்சமாக பாரிஜாதமும், தீர்த்தமாக சுத்தபுஷ்கரணி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்நிதி ஆஞ்சநேயர் அஞ்சலியில் அருளுகிறார்.
108 திவ்விய தேசங்களில் வரும் "சிங்கவேழ் குன்றம் இது' எனவும் கருத்துண்டு.
நரசிம்மர் பிரதோஷ வேளையில், சில நிமிடங்கள் அவதரித்து, இரண்யனை வதம் செய்ததால், இந்த நேரத்தில் உற்சவ நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தரிசித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
"புதன், சனிக்கிழமைகளில் துளசி மாலை சார்த்தி வேண்டி பானக நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குத் தர வாழ்வில் தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். எதிரிகள் தொல்லை ஒழியும். வாரத்தில் ஒரு நாள் வீதமாக, ஐந்து வாரங்கள் திரிநேத்திர தரிசனம் செய்து, ஒன்பது தடவை கிரிவலம் வர விரைவில் திருமணங்கள் நடக்கும். கிரிவலம் வந்து , தொட்டில் கட்டினால் குழந்தைப் பேறு கிடைக்கும்' என்பது ஐதீகம்.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் கோயிலின் பெயரிலேயே ஊரின் பெயரும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது திருப்பணி நடைபெறுகிறது.
விவரங்களுக்கு 9092109498; 9444103372 .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.3.1976: பாடநூல்கள் தணிக்கைக்கு குழு - கட்சி சார்பு பகுதிகள் நீக்கப்படும்
தினப்பலன்கள் - கும்பம்

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007

கந்தா்வகோட்டையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
வீடியோக்கள்

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

