"ஓம்' என்ற பிரணவ ஒலியில் வேதங்கள் தோன்றின. மந்திரங்கள், வாக்கு, பேசும் மொழி... என அது பரந்து விரிந்தது.
வாக்வாணி, கலைவாணி, வித்யாம்பிகை, சாரதா தேவி, கலைமகள், மேதாதேவி, பாரதி, கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசைமடந்தை, காயத்ரி, சாரதா, வெண்தாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி உள்ளிட்ட பெயர்களும் சரஸ்வதி தேவிக்கு உண்டு.
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பெüத்தர்களாலும் வணங்கப்படுகிறார்.
சென்னைக்கு அருகேயுள்ள பெரியபாளையத்தில் ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கிய கபால கிண்ணமும் ஏந்தி அம்மனாக வீற்றிருக்கிறாள்.
காஞ்சியில் முப்பெருந்தேவியரும் சிவனை வணங்கி குறை நீங்கினர். சூரியன், பிரம்மா, சரஸ்வதி, இஷ்டசித்தீசக் குளத்தில் நீராடி கச்சபேஸ்வரரை வணங்கி சிறந்தனர்.
"நாளந்தா பல்கலை. பேராசிரியர் மயூரசர்மன் இஷ்டசித்தீசக் குளத்தில் நீராடி சூரியனை வழிபட்டு, தனது பார்வை மீண்டும் கிடைத்து சரஸ்வதியின் அருளால் சூரியசதகம் என்னும் நூலை இயற்றினார்' என கல்வெட்டு குறிக்கிறது. எட்டு கரங்களுடன் அருளும் சரஸ்வதியை கல்வி தொடக்கத்துக்கும், வித்தை மேம்படு
தலுக்கும் வணங்கித் துவக்குகின்றனர்.
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் உள்ள மிகப் பெரிய சரஸ்வதி, தனது கைகளில் வீணையின்றி சுவடிகளை ஏந்தி வீற்றிருக்கிறாள்.
திருவெண்காட்டு அம்பாளோ பிரம்ம வித்யாம்பிகை, சரஸ்வதி தேவியாகவே வழிபடப்படுகிறாள்.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயிலில் அற்புதச் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி தனது கணவனோடு, நான்கு கரங்களுடன் கல்வியும், ஞானமும் தரும் "ஞானவாணி'யாக அருளுகிறாள்.
"சீர்காழி கொள்ளிடம் ஆற்றங்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமத்தில் ஸ்ரீவித்யாநாயகி உடனுறை ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயிலில் லிங்கத்தை சரஸ்வதி பிரதிஷ்டை செய்து, ஆயக் கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவமிருந்து அருள் பெற்றார்' என தல வரலாறு தெரிவிக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.
சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதி அம்சமான ராஜமாதங்கி கையில் வீணையுடன் இருபுறமும், சிவந்த அலகுடைய பச்சைக்கிளிகள் காணப்படுகின்றன. முன்புறம் ஞானத்தின் அடையாளமாக கிளியாசனம் இருக்கிறது. ராஜமாதங்கி தேவி பராசக்தியின் மந்திரியாதலால், இவளை வழிபடும் பக்தர்களுக்கும் ஞானத்தைக் குறைவில்லாமல் வாரி வழங்குகிறாள்.
திருச்சி உத்தமர் கோயிலில், பிச்சாடனராக வந்த சிவன் தோஷம் நீங்கப் பெற்ற "பிட்சாண்டார் கோயில்' உள்ளது. பிரம்மாவும் பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருக்க
இங்கேயே ஆசி வழங்கினார் என்கிறது தல வரலாறு . சரஸ்வதி தனி சந்நிதியில் கரங்களில் வீணை இல்லாமல், ஓலைச்சுவடியோடும், ஜெபமாலையோடும் ஞான சரஸ்வதியாக அருளும் தலம்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கல்விக்
கடவுளர்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவரருக்கும் சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும் பக்தர்கள் நலன் வேண்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
கிராமக் கோயில்களில் பேச்சியம்மன் என்ற பெயரில் அருள்புரியும் அம்மனை பேச்சுக் குறைவுடையவர்கள் தரிசித்து பலன் பெறுகின்றனர்.
சரஸ்வதி தேவிக்கு கொல்லூர் மூகாம்பிகை கோயில், சோட்டாணிக்கரை
பகவதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் தனி சந்நிதிகளும், திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோயிலுக்கு எதிரில்
சந்நிதியும் உள்ளன.
ஜப்பான், இந்தோனேஷியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, திபெத் உள்ளிட்ட பல நாடுகளிலும் சரஸ்வதி தேவிக்கு கோயில்கள் உள்ளன.
கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவியை, சிறப்பு பூஜைகளுடன் வழிபடும் நாள் "சரஸ்வதி பூஜை' ஆகும். இந்த நாளில் வழிபாடு செய்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். நவராத்திரி விழாவின் 9 }ஆவது நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில்தான் குழந்தைகள் பெரியவர்களின் கைபிடித்து எழுதும் "அட்சராப்பியாசம்' நிகழ்வும் நடைபெறுகிறது.
}இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு நவ. 22-இல் குடமுழுக்கு! அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

ஹிந்தி திணிப்பை அரசியலுக்காக கையில் எடுக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

‘உலகம் உங்கள் கையில்’: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி

ஒடிஸாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முன்னோா் வழிபாடு
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

