12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.9 - பிப்.15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.9 - பிப்.15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களின் திறமை பளிச்சிடும்.  மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். காரியங்களைச் சாதிப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்தவும்.  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு  உண்டாகும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணியை ஆற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்களுக்கு குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை நீங்கும்.

பெண்களுக்கு திருப்தியான சூழல் உண்டாகும். மாணவர்கள் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வருமானம் சிறக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதியவர்களுக்கு அலுவலக வேலைகளைக் கற்பீர்கள். வியாபாரிகளுக்கு நெருக்கடி குறையும். விவசாயிகள் பயிர் விளைச்சலில் சற்று மேன்மையைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களைப் படிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வருமானம் உயரும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். மாணவர்களுக்கு படிப்பில்  சவால்களை எதிர்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

புதிய உத்வேகத்துடன் லாபம் கிடைக்கும்.  சமயோஜிதமாகப் பேசி பழகுவீர்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பீர்கள்.  விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்து சேரும்.  கலைத் துறையினர் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் தைரியத்துடன் குடும்ப விஷயங்களை முடிவெடுப்பீர்கள். மாணவிகள் பெற்றோர் கருத்துக்குச் செவி சாய்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 09.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பண வரவு நிறைவாகவே இருக்கும். சங்கடங்களிலிருந்து மீண்டு வருவீர்கள். புதிய நண்பர்களிடம் நெருக்கம் வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.  வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்கவும்.

சந்திராஷ்டமம் - பிப். 10, 11.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் கூடும்.  பெரியோர்களின்ஆசியைத் தேடி பெறுவீர்கள். பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள்.

விவசாயிகளின் நிலைமையில் சிறிய மாற்றங்கள் உருவாகும். அரசியல்வாதிகள் புது முயற்சிகளைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

கலைத் துறையினர்  உழைப்பை மூலதனமாக்கிக் கொள்வீர்கள். பெண்கள் கணவரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - பிப். 12, 13.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் எண்ணங்களில் தெளிவு பிறக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார வளர்ச்சியைக் காண்பீர்கள்.  குடும்பப் பெரியோரின்ஆதரவு சிறப்பாகத் தொடரும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பொறுமையாக செய்வீர்கள். வியாபாரிகளின் முயற்சி வெற்றியைத் தேடித் தரும். விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.

அரசியல்வாதிகள் எவரையும் பகைத்துகொள்ள வேண்டாம். கலைத் துறையினர் திறமைகளை நிரூபிப்பீர்கள். பெண்களுக்கு பண வரவு உண்டாகும். மாணவர்கள் பிறரிடம் சுமுகமாகவே பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 14, 15.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பப் பூசல்களைத் தீர்த்து வைப்பீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்பார்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தக்க வைப்பீர்கள். பெண்கள் கணவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். மாணவர்கள் புதுத்தெம்புடன் பாடங்களைப் படித்து முடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பிரிந்த உறவினர்கள் மீண்டும் இணைவார்கள். நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவுக்குத் தடை இருக்காது. வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.  விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் ஈடுபடுவீர்கள்.

கலைத் துறையினருக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். பெண்களுக்கு கணவரின் பாசமும் அன்பும் பெருகும். மாணவர்கள் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தெய்வ பலம் கூடும். சுய முயற்சி, புத்திசாலித்தனமான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  மதிப்பும் மரியாதையும் கூடும். பிறரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் பிரச்னைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகளின் லாபம் உயரும். அரசியல்வாதிகள் பேச்சில் பொறுமையும் விவேகத்தையும் கடைப்பிடிப்பீர்கள்.

கலைத் துறையினரின் தன்னம்பிக்கையும் விவேகத்தையும் கடைப்பிடிப்பீர்கள்.  பெண்கள் புதிய பொருள்களை வாங்குவார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வசதிகள் பெருகும். சுபச் செலவு உண்டாகும். உடனிருப்போரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிறரிடமான மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத்  துறையினர் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் கை வந்து சேரும்.

பெண்மணிகள் விட்டுக் கொடுத்து பிரச்னைகளைத் தவிர்த்துவிடுங்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலைச் சீராக நடத்துவீர்கள்.  புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். பயணங்களாலும் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளின் கனவு பலிக்கும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள்.

மாணவர்கள்   பெற்றோரின் ஆதரவால் நன்மை அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தடைபட்ட காரியங்கள் நடக்கும். சில சோதனைகள் ஏற்பட்டு விலகும். சிலர் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நற்பெயர் ஏற்படும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு பண வரவு இருக்கும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com