தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 10 - 16) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
செயல்கள் தாமதமாகவே முடிவடையும். கடன் பிரச்னைகள் ஏற்படாது. எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். உடனிருப்போரின் ஆதரவு மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ப பொருள்களை வாங்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத் துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாடும் நேரத்தில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடலுழைப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். நல்ல செய்திகள் கிடைக்கும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்கள் முயற்சிகளைக் கைவிட மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். விவசாயிகள் திட்டமிட்ட பணிகள் திருப்தியாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்திடம் கவனமாக இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் சேரும். பெண்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தைக் கூட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சூழ்நிலைக்கேற்ப சமயோஜிதமாக நடப்பீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சீராகும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புகழும் செல்வாக்கும் உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகள் புதிய வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு பணவரவு உண்டு. பெண்கள் கோபமாகப் பேச வேண்டாம். மாணவர்கள் மேற்படிப்புகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பயணங்களால் அனுகூலம் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல யோகம் உண்டு. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிப்பதோடு, நீர்வளமும் பெருகும்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலம் உண்டு. கலைத் துறையினரின் திறமைகளுக்கேற்ப ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் உயரும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பூர்விகச் சொத்துகளால் வருமானம் உண்டு.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் திருப்பங்கள் ஏற்படும். விவசாயிகள் கால்நடைகளைக் கவனத்துடன் பராமரிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடக் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். மாணவர்களுக்கு நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாகனச் செலவுகள் ஏற்படும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டு. புதிய பொறுப்புகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணம் வந்து சேரும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் திறப்பீர்கள். விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு துறையில் அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் இல்லத்துக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உறவினர்கள் வருகை உண்டு. பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.
பாகப் பிரிவினை விஷயங்கள் தள்ளிப் போகும். வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தில் நற்பெயரை வாங்குவீர்கள். கலைத் துறையினர் மிகவும் அவசியமான பயணங்களை செய்வது நல்லது. பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 10, 11.
தயக்கங்களும், சஞ்சலங்களும் குறையும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய கருவிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு உண்டு. வியாபாரிகள் வழக்குகளில் இருந்து தப்புவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினர் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 12, 13.
எதிர்பாராத பயணங்கள் உண்டு. நண்பர்களுடன் இணக்கமாக நடப்பீர்கள். மற்றவர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவர். வியாபாரிகளின் பிரச்னைகள் தீரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டு.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் நட்புடன் பழகுவீர்கள். கலைத் துறையினர் துறை சார்ந்த மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 16.
பொருளாதாரம் சிறக்கும். பங்கு வர்த்தகத்தில் வருமானம் கிடைக்கும். எதிர்காலத்துக்காகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள், எதிர்மறை சிந்தனைகள் மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் முக்கிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
எடுத்த காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நல்லோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள். குடும்பப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் உறவினர்களில் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபச் செய்திகள் வந்து சேரும். கோபத்தையும் வீண்வாக்குவாதத்தையும் தவிர்க்கவும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்க முயற்சிப்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கவனமாக இருப்பீர்கள். கலைத் துறையினர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.