
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன. 30 - பிப். 5) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
வருமானம் படிப்படியாக உயரும். நேர்முக, மறைமுக எதிரிகள் மறைந்து விடுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பார்கள். வியாபாரிகளின் செயல்திறன் அதிகரிக்கும்.
விவசாயிகள் அறுவடையில் லாபத்தைப் பார்ப்பீர்கள். அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து, கட்சித் தலைமையிடம்
நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள். பெண்களுக்குக் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வீட்டிலும் வெளியிலும் பெயர், புகழ் அதிகரிக்கும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் சில உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். கலைத்துறையினருக்கு ஆராய்ச்சி சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தெளிவாகச் சிந்தித்து முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள். வியாபாரிகள் சக வியாபாரிகளின் அச்சுறுத்தல்களை சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு காரியங்களில் சிறிது தாமதம் உண்டாகும்.
பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு மேன்மை உண்டாகும். விவசாயிகள் மறைமுகத் தடைகளைத் தகர்ப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை நினைத்த மாதிரி செய்து முடித்துவிடுவீர்கள். கலைத்துறையினர் சில அனுபவங்கள் மூலம் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டங்களில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மழலை பாக்கியம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்ட காரியங்களை நிறைவேற்றிவிடுவீர்கள்.
விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் நேர்மையான சிந்தனையுடன் ஈடுபடுவீர்கள்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வீர்கள். பெண்களுக்கு முகத்தில் வசீகரமும், தோற்றத்தில் பொலிவும் உண்டாகும். மாணவர்கள் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நெடுநாளைய கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் முடிவாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள்.
விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சீராகவே தொடரும். அரசியல்வாதிகளுக்குக் கட்சிப்பயணங்கள் சாதகமாக முடிவடையும். கலைத்துறையினர் பாராட்டுகளையும் பரிசையும் பெறுவீர்கள்.
பெண்களுக்குக் குழந்தைகளால் பெருமை வந்து சேரும். மாணவர்கள் தேவையற்ற குழப்பங்களில் இருந்து விடுபட்டு விடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் உயர்வான நிலையில் இருக்கும். தெளிவாகச் சிந்தித்து நேர்வழியில் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் செயல்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் பணிபுரிந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
விவசாயிகள் சிறப்பான விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய மனிதர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினர் சக கலைஞருடன் சேர்ந்து சில பணிகளைச் செய்வீர்கள். பெண்களுக்குக் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தை கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விலகி இருந்த நட்பு, உறவு மறுபடியும் தேடி வரும். சவாலான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்துவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் நிதானமாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு வேலைகள் கச்சிதமாக முடிவடையும். விவசாயிகள் சக விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி பிரச்னைகளில் தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
பெண்கள் தியானம், பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 30, 31.
பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் நலனில் மேலதிகாரிகள் அக்கறை காட்டுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினரின் வருமானம் ஓரளவு சீராகவே இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிகளுக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 1, 2.
வாராக் கடன்களும் வசூலாகும். உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சில எதிர்ப்புகள் தோன்றினாலும், அவற்றைச் சமாளிப்பீர்கள்.
விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களைச் சந்தித்து உதவிகளைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு கணவருடன் உறவு மேன்மையாகும். மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வியில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 3, 4.
அனைத்துக் காரியங்களும் நீங்கள் நினைத்தபடியே முடியும். பூர்விக சொத்தில் லாபம் வரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் புதிய பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகளுக்குக் கால்நடைகளாலும் வருமானம் வரும். அரசியல்வாதிகள் வழக்குகளில் இருந்து விடுபட்டு விடுவீர்கள்.
கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளின்படி நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 5.
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பொதுக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபார வட்டாரத்தில் செல்வாக்குடன் இருப்பீர்கள். விவசாயிகளுக்கு பயிர்களில் புழு, பூச்சிகளின் தொல்லை இராது.
அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.
பெண்கள் உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.