
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் இந்த வார (ஜன. 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.
பொருளாதாரம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
கலைத்துறையினரின் பெயர் வெளிவட்டாரத்தில் உயரும். பெண்கள் குடும்பச் சொத்து விஷயங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் அனுசரணையாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் விவேகம் கூடும்.
விவசாயிகள் சக விவசாயிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். கலைத்துறையினருக்குத் தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும்.
பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக நடத்துவீர்கள். மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சாதகமான நிலை ஏற்படும்.
விவசாயிகள் பால் வியாபாரத்தால் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினர் துறையில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தினரிடம் எதிர்பார்த்த அன்பு, பாசத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் சிறப்பான வளர்ச்சி அடைவீர்கள். பேச்சின் மூலம் அனைவரையும் கவருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியமின்றிச் செயல்படுவீர்கள்.
வியாபாரிகள் விலை உயர்ந்த பொருள்களை முதலில் விற்று முதலீடுகளிலிருந்த பற்று வரவைக் குறைப்பீர்கள்.
விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகளின் ஆதாயமான முயற்சிகள் ஈடேறும்.
கலைத்துறையினரின் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.
பெண்கள் விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஊக்கத்தைக் கூட்டிக்கொண்டு படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.லை.
சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளைப் பெற்று புகழடைவீர்கள். குழந்தைகளால் பெருமையடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சிறிது வருத்தமுண்டாகும்.
வியாபாரிகள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு சில முக்கியமான விவசாயப் பணிகள் முடிவு பெறும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள்.
பெண்களுக்கு சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 23, 24, 25.
பெரியோரின் ஆலோசனை நல்ல மாற்றத்தை உண்டாக்கும். பூர்விக சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.
உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் புதிய நண்பர்களுடன் கூட்டுச் சேர்வீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய உத்தியுடன் கட்சிப் பணியில் ஈடுபடுவீர்கள்.
கலைத்துறையினரின் பணி அனைத்தும் குறித்த காலத்துக்குள் முடிவடையும்.
பெண்கள் குழப்பங்கள் நீங்கி, தெளிவுடனும் சந்தோஷத்துடனும் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 26, 27.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் எதிர்பார்த்த சலுகை தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்று அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி புதிய இலக்குகளை எட்டுவர்.
அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகமடைவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 28, 29.
உங்கள் பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். வங்கியிடமிருந்து கடன் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு பல வகையிலும் பணவரவு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் உயரும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
பெண்களுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் கூடும். மாணவர்கள் விரும்பிய துறையில் படித்து முன்னேற்றமடைவர்.
சந்திராஷ்டமம் - இல்லை.
அனைத்துக் காரியங்களிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள்.
வியாபாரிகள் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருப்பீர்கள்.
விவசாயிகள் கால்நடைகள் வாங்கி, அதனால் வருமானத்தையும் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வரும்.
கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் தனித்துவம் வெளிப்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளில் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் போனஸýம் கிடைக்கும்.
வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பீர்கள்.
விவசாயிகளுக்கு கை நழுவிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் சற்று கூடுதல் செலவு செய்வீர்கள். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
மாணவர்கள் நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்கள் மூலம் புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
வியாபாரிகள் எதிர்வரும் போட்டிகளையும் சமாளிப்பீர்கள். விவசாயிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகளின் மனதில் புதிய நம்பிக்கைகள் பிறக்கும்.
கலைத்துறையினருக்கு சமூகத்தில் வரவேற்பு அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் நாட்டம் அதிகரிக்கும்.
மாணவர்கள் விளையாட்டைக் குறைத்துக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
அன்னை வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். புதிய நிலம், வீடு வாங்க முயற்சிகளை முன்னெடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்குச் சில உதவிகளைச் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.
கலைத்துறையினரின் மதிப்பு, மரியாதை உயரும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.