பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக சென்னை திருவேட்டீஸ்வரன் கோயில் விளங்குகிறது. மகாலட்சுமி வழிபட்டதால் திருவேட்டீஸ்வரன் என இறைவன் அழைக்கப்படுகிறார்.
காலப்போக்கில் இறைவன் மண்ணில் புதையுண்ட நிலையில், பசு ஒன்று நாள்தோறும் அங்கே பால் பொழிவதைக் கண்டு மக்கள் மண்ணைத் தோண்டினர். அப்போது இறைவன் சிறிய வடுவுடன் வெளிப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் ராகு - கேது சிற்பங்கள் அமைந்துள்ளதால், தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து பயன்பெறுகின்றனர்.
ஆற்காடு நவாப் காலத்தில் இந்தக் கோயிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் இறைவனுக்குச் செய்யப்படும் அர்த்தஜாம பூஜைக்கு இன்றளவும் ஆற்காடு நவாப் வம்சாவளியினர் தினமும் பசும்பால் வழங்கி வருகின்றனர்.
இதை கெüரவிக்கும் விதமாக ராஜகோபுரத்தின் இடது மேல்புறத்தில் சுதைச் சிற்பமாக ஆற்காடு நவாப், அர்ச்சகர், சிவலிங்கம் மீது பால் பொழியும் பசுகாட்சி தரும் கோலம் கண்டு ரசிக்கத்தக்கது. இங்கு பாம்பன் சுவாமிகள் வழிபட்டுள்ளார். அருணகிரிநாதரின் பஞ்சலோக சிலையும் உள்ளது. இங்குள்ள சோமாஸ்கந்தர் சிலை கலைநயம் கொண்டதாகும். தல விருட்சம் செண்பக மரம்.
மார்ச் 19 முதல் ஒரு வார காலம் சூரிய உதய ஒளிக்கதிர்கள் இறைவன் திருமேனியில் விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. சித்திரையில் 10 நாள்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
சென்னை மாநகரின் மையப் பகுதியான திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில் திருவேட்டீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

விராலிமலை: கடும் போட்டியில் திமுக - அதிமுக

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

புள்ளிகள்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

