இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெதன்யாஹு கூறியது: எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், திறமையும் எங்களுக்கு உள்ளது. உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இறையாண்ûமையைக் காக்கும் எங்களுடைய இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உறுதுணையாக இருந்து வருகிறது. அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்ரேலுக்கு ஈரான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நெதன்யாஹு தெரிவித்தார்.
ஒபாமா கூறியது: அதிபர் என்ற முறையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுதான் என்னுடைய முதல் பணி. அதுபோல், இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உங்களது (நெதன்யாஹு) முதல் கடமை. எனக்குத் தெரிந்தவரை இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது.
இஸ்ரேல் பாதுகாப்புக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
முன் எப்போதம் இல்லாத வகையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுவடைந்து வருகிறது.
ராணுவமும், உளவுத் துறையும் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கூட்டு ராணுவ பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு உதவிகள் மற்றும் "அயர்ன் டோம்' உள்ளிட்ட ஏவுகணை உள்பட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி வருகிறோம்.
ராணுவ ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்: இஸ்ரேலுடனான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது. இதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
"அயர்ன் டோம்' ஏவுகணைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் (பிரச்னைக்குரிய காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகளால் ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை பயன்படுகிறது).
ஈரான் அணு ஆயுத உற்பத்தி கட்டுப்படுத்தப்படும்: இந்த மண்டலம் மட்டுமல்லாது உலக நாடுகளின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அணு ஆயுத நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடக்கை எடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் கொள்கை.
எனினும், தூதரக அளவிலான சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தபடியாக சர்வதேச நாடுகள் மூலம் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். தேவைப்பட்டால் மற்ற வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்படும் (ராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்பதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்).
சிரியாவில் ரசாயன ஆயுதம்: சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதுக்கு எதிராக புரட்சியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக, அரசும், போராட்டக்காரர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் இத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுவதில் நம்ப முடியவில்லை. இதுகுறித்து ஆராயப்படும் என்று ஒபாமா தெரிவித்தார்.
காஸா பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒபாமா இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் தெற்குப் பகுதியில் காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகள் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அந்த ஏவுகணைகளில் ஒன்று எல்லையில் உள்ள எஸ்டெரோட் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது தாக்கியது. எனினும், உயிரிழப்பு ஏற்படவில்லை. மற்றொரு ஏவுகணை திறந்தவெளி பகுதியில் விழுந்தது என போலீஸார் தெரிவித்தனர்.
ஒபாமா நட்ட மரக்கன்று அகற்றம்: அமெரிக்க அதிபர் ஒபாமா, தான் கொண்டுவந்த மரக்கன்று ஒன்றை நெதன்யாஹுவின் தோட்டத்தில் நட்டார். ஆனால், அந்த மரக்கன்று அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வேளாண் அமைச்சகம் கூறியது:
நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கன்றுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒபாமா கொண்டுவந்த மரக்கன்று பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே மீண்டும் நடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் சென்றார் ஒபாமா
இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்ட ஒபாமா, பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றார். அங்கு அவருக்கு குறைவான வரவேற்பு காணப்பட்டது. அதிபரான பிறகு முதன் முறையாக அங்கு சென்றுள்ள அவர், பிரதமர் சலாம் ஃபய்யத்தை சந்தித்து பேசுகிறார். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


