மியான்மரில் முஸ்லிம் மற்றும் புத்த மத பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
கலவரத்தையொட்டி மியான்மரின் மத்தியப் பகுதியில் இருந்த மசூதிகள் இடிக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
மெய்க்திலா பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கநகைக் கடை ஒன்றில் புத்த துறவி ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவம், புதன்கிழமை நடந்தது. இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் வீதியில் சண்டையிடத் தொடங்கினர். இதுவே கலவரத்துக்குக் காரணம் என்று போலீஸாரின் அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் புத்த துறவி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த புத்த மதத்தினர், அப்பகுதியில் இருந்த 3 மசூதிகளை இடித்தனர். கலவரத்தைக் கடுப்படுத்த அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முஸ்லிம் பிரிவினருக்கும், புத்த மத பிரிவினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


