கருக்கலைப்பு தொடர்பான புதிய மசோதாவுக்கு அயர்லாந்து நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படம் எனத் தெரிகிறது. இந்திய பல் டாக்டர் சவிதா ஹாலப்பா என்பவர் 17 வார கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற கருக்கலைப்பு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவ நாடான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சவிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற சவீதாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் அவர் இறந்தார் எனத் தெரியவந்தது. இதனால் சர்வதேச அளவில் அயர்லாந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது கருக்கலைப்பு செய்ய புதிய சட்டம் வழி செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






