நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வெள்ளை மாளிகையில் தீ

அமெரிக்க அதிபர் மாளிகையில் கரும்புகை எழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Updated On :11 மே 2013, 11:13 pm IST

அமெரிக்க அதிபர் மாளிகையில் கரும்புகை எழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலையில் திடீரென்று கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எச்சரிக்கை மணி ஒலித்தது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த நிருபர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனிடையே, அங்குள்ள மின்மாற்றி சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே புகை வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டது என்று அதிபர் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதிக்கு மின்சார சப்ளை மீண்டும் அளிக்கப்பட்டதாகவும், அதிபர் குடும்பத்தாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.