/

"அணு ஆயுதம் இருந்ததால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை'

அணு ஆயுதங்கள் இருந்ததால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வில்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஸ்டீபன் பிளாங்க் தெரிவித்துள்ளார்.

Updated On :11 மே 2013, 10:31 pm

அணு ஆயுதங்கள் இருந்ததால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வில்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஸ்டீபன் பிளாங்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேசிய ராணுவ தொழில்துறை சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: இந்தியா மீதான பல்வேறு பயங்கரவாத தாக்குல்களுக்கு பாகிஸ்தான் பின்னணியாக இருந்தாலும், அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் இருந்ததால் இந்தியா பதில் தாக்குதல் நடத்தவில்லை.

இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளதால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தவில்லை. இதைத் தெரிந்து கொண்டு தான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை தடங்கலின்றி பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இல்லையென்றால் இந்தியா கண்டிப்பாக தாக்குதல் நடத்தி இருக்கும்.

இதே போல் பனிப்போர் காலத்திலும் அணு ஆயுதங்கள் போரை தடுக்கக்கூடிய காரணிகளாக செயல்பட்டன. அமெரிக்கா-சீனா, சீனா-ரஷியா இடையே போர் மூள்வது தடுக்கப்பட்டது.

பனிப்போர் காலத்தில் முழு ஐரோப்பாவையும் அழித்து விடுவோம் என ரஷியா கூறி வந்தது. அதே போல் அமெரிக்காவும் ஒட்டுமொத்த சோவியத் யூனியனையும் அழித்து விடுவோம் என கூறியது.

அணு ஆயுதங்கள் உள்ளது ஒரு வகையில் உலகை போர் அபாயத்தில் இருந்து காப்பதாக உள்ளது. அதே சமயம் இனி மேல் கூடுதலாக அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க வேண்டும் என்றார் பிளாங்க்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.