தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து யான்ஹப் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: கொரிய போர் தொடங்கியதன் நினைவுதினமான கடந்த புதன்கிழமை, வட மற்றும் தென் கொரியாவின் இணையதளங்கள் செயலிழந்தன. இந்நிலையில், தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் இணையதளத்தில் ஊடுருவி முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த இணையதளத்தைப் பின்தொடரும் சுமார் 1 லட்சம் பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.
இந்த தகவலை அதிபர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்துக்காக அதிபர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இணையதள தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1950-53ஆம் ஆண்டு வரை கொரிய போர் நடைபெற்றது. அதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
எனினும், மறைமுகமாக வட மற்றும் தென் கொரியா இடையே போர் தொடர்கதையாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

