ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும்.
மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.
இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.
இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.
இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

