இராக்கில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 65 பேர் உயிரிழந்தனர். மேலும் 190 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் வன்முறைக்கு 520-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தலைநகர் பாக்தாதில் சனிக்கிழமை இரவு 12 கார் குண்டுகளும், சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் அடுத்தடுத்து வெடித்தன. தெற்கு பாக்தாதில் மடைன் என்ற இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது.
குண்டு வெடித்த போது பாக்தாத் நகர மக்கள் நோன்பு முடிந்து கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொண்டும், தேநீர் விடுதிகளில் பொழுதை போக்கிக் கொண்டும், உணவருந்திக் கொண்டும் இருந்தனர். குண்டுவெடிப்பை அடுத்து அவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
பாக்தாத் நகரின் மத்தியில் அமைந்துள்ள கர்ராடா பகுதியில் நிகழ்ந்த 2 கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். ஜஃப்ரானியா பகுதியில் இரண்டு கார் குண்டுகளும், சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டும் வெடித்தன.
வடக்கு இராக்கில் உள்ள மோஸல் நகரில் ரோந்துப் போலீஸôரை குறிவைத்து சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொருவர் காயமடைந்தார். இந்நகரின் மற்றொரு பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஏழு போலீஸôர் உள்பட 22 பேர் காயமடைந்தனர்.
பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள சன்னி பிரிவினரின் மசூதிக்குள் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமைதான் போஸீலாருக்கு தெரியவந்தது.
அங்கு சனிக்கிழமை இரவானது, வன்முறையின் கோர தினமாக கழிந்தது. ஜூன் மாதம் 10-ஆம் தேதி இங்கு நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பயங்கரவாதிகள் சன்னி மற்றும் ஷியா பிரிவினரின் மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்களில் இரு பிரிவினருக்குமான மோதல் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை வன்முறைக்கு 2,700-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

