விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட எட்டு தமிழ் அமைப்புகள் மீது தடை விலக்கி கொள்ளப்பட்டது.
கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு கெஜட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரிட்டாணியா தமிழ் அமைப்பு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, தேசிய கனடா தமிழர்கள் கவுன்சில், தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய எட்டு அமைப்புகளின் தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக 16 அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ அரசு, கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.
ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள சிறீசேனா தலைமையிலான அரசு எட்டு அமைப்புகள் மற்றும் 155 தனி நபர்கள் மட்டுமே தடை விதித்துள்ளது.
இந்த தடை விலக்கல் குறித்து பேசிய நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மங்கல சமரவீரா, நாட்டின் பிரிவினைக்கு தூண்டாத எவருடன் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
தடைவிலக்கப்பட்ட அமைப்புகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்தவித தொடர்பில்லை. இந்த அமைப்புகள் தமிழர்களுக்கு ஆதரவாக மட்டும் செயல்பட்டு வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

