வங்கதேசத்தில், ஷியா மசூதியில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமிய ஸ்டேட் (ஐ.எஸ்.) இயக்கம் பொறுப்பேற்றுள்ளது
வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள ஷிப்கஞ்சி நகரில் உள்ள அல்-முஸ்தபா ஷியா மசூதிக்குள் நேற்று நுழைந்த மூன்று பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதம் பொறுப்பேற்று டூவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளதாக, ஜிகாதி தீவிரவாதத்தை கண்காணித்து வரும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட எஸ்.ஐ.டி.இ. புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
எனினும், ஐ.எஸ். இயக்கம் வங்கதேசத்தில் செயல்படவில்லை என அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்டோர் உண்மையான முஸ்லீம்கள் இல்லை என வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார்.
ஆனால், வங்கதேசத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆங்கில சஞ்சிகையான தாபிக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

