தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள்: வரைவு அறிக்கையை ஏற்றது ஐ.நா.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஐ.நா. திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டது.

Published On :

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஐ.நா. திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை (செப். 15) தொடங்கவுள்ள ஐ.நா.வின் 70-ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோரும் இந்தியாவின் நீண்ட நாளைய கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக, இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வரைவு அறிக்கையை ஒருமித்த கருத்து அடிப்படையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டிருப்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
 ஐ.நா.வின் நடப்புக் கூட்டத்தொடரில், சீர்திருத்தங்கள் தொடர்பான எங்களுடைய கருத்துகளை முன்வைப்பதற்கு, இந்த வரைவு அறிக்கை வழிகாட்டியாய் அமையும் என்றார் அசோக் முகர்ஜி.
 இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்த வரைவு அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது, இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
 இந்தப் பிரச்னையை, வரைவு அறிக்கை அளவில் முன்னெடுத்துச் சென்ற ஐ.நா. பொதுச் சபை தலைவர் சாம் குடேஸாவையும், அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை குறித்த குழுவின் தலைவர் கோர்ட்னே ராத்ராயையும் பாராட்டுகிறோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.