கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அகதிகள் விவகாரம்: மியான்மர் எல்லையில் சீன ராணுவம் கண்காணிப்பு அதிகரிப்பு!

உள்நாட்டு கலவரம் காரணமாக மியான்மரில் இருந்து அகதிகள் வந்து குவியும் விவகாரம் காரணமாக, சீனாவின் தெற்கு எல்லையில் ராணுவ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2016, 7:24 am

பீஜிங்: உள்நாட்டு கலவரம் காரணமாக மியான்மரில் இருந்து அகதிகள் வந்து குவியும் விவகாரம் காரணமாக, சீனாவின் தெற்கு எல்லையில் ராணுவ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் அரசுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே உண்டான பிரச்சினையின் காரணமாக மக்கள் அகதிகளாக சீனாவின் தெற்கு எல்லையில் வந்து தஞ்சம் புகுவதுஅதிகரித்துள்ளது.  சமீபத்திய தகவல்களிளின்   படி, இவ்வாறு அங்கு  வந்துள்ள சுமார் 3000 பேரை, எல்லைப்புற மாகாண அரசுடன் இணைந்து மறு குடியேற்றம் செய்ய சீன அரசு உதவியுள்ளது. ஆனால் இதனால் தங்களது நாட்டின் ஒருமைப்பாடு  மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகலாம் என்று சீனா நினைக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, ராணுவ செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன், 'இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க சீன மக்கள் ராணுவம் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.